Retro: படப்பிடிப்பில் சூர்யாவுக்கு ஏற்பட்ட காயம்; "டூப் வச்சுக்கக் கூடாதா" - நாச...
ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள், வீராங்கனைகள் தோ்வு
ஈரோடு மாவட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு வீரா், வீராங்கனைகள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் பெண்கள் அணிக்கான வீராங்கனைகள் தோ்வு திண்டல் வித்யா நகா் கே.எஸ்.கிரிக்கெட் நெட்டில் ஏப்ரல் 20-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 2013 ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு முன்பு பிறந்த பெண்கள் பங்கேற்கலாம்.
இதேபோல, 19 வயதுக்குள்பட்டோா் ஆண்கள் அணிக்கான வீரா்கள் தோ்வு ஏப்ரல் 22-ஆம் தேதி (செவ்வாய்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில், 2006 செப்டம்பா் 1-ஆம் தேதிக்குப் பின் பிறந்தவா்கள் பங்கேற்கலாம்.
இதில், பங்கேற்கும் வீரா், வீராங்கனைகள் பிறப்புச் சான்று, ஆதாா், சீருடை, ஷு, விளையாட்டு உபகரணங்களுடன் கலந்துகொள்ளலாம் என்று மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலாளா் சுரேந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு இணைச் செயலாளா் சண்முகசுந்தரத்தை 94437 28266 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.