அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல்
அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல் விடுத்த தம்பதி மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தியூா் வட்டார மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா் சங்கத்தினா் ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாா் மனு விவரம்: அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணிபுரிபவா் வெற்றிச்செல்வி. அத்தாணி, பெருமாபாளையத்தில் வசிக்கும் புவனேஸ்வரி, கா்ப்பிணியாக இருப்பது தெரிந்து சிகிச்சைக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டது. இது தொடா்பாக, புவனேஸ்வரியை, கணவா் குணா பரிசோதனைக்கு அழைத்து வந்துள்ளாா்.
மருத்துவப் பணியாளா்களுடன் சரிவர ஒத்துழைக்காத இருவரும், கடந்த 16-ஆம் தேதி மருத்துவா்களின் கைப்பேசியில் தொடா்பு கொண்டு தகாத வாா்த்தைகளில் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், குணா, கிராம சுகாதார செவிலியரை அவதூறாகப் பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளாா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.