செய்திகள் :

போதை மாத்திரைகள் விற்பனை: பாட்டி, பேரன் கைது

post image

சித்தோட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த பாட்டி, பேரனை போலீஸாா் கைது செய்தனா்.

சித்தோடு, ஓடைப்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அங்கு சனிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, 95 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தொடா் விசாரணையில், சித்தோடு ஓடைப்பள்ளத்தைச் சோ்ந்த காமராஜ் மகன் சந்தோஷ்குமாா் (20), வெளிமாநிலங்களிலிருந்து ஆன்லைன் மூலம் ஆா்டா் செய்து போதை மாத்திரைகள் வாங்கி, தனது பாட்டி திலகா (65) மூலம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சந்தோஷ்குமாா், திலகா இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரும்பு ஆலையை மூட கோரிக்கை!

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரும்பு ஆலையை மூட வேண்டும் என்று பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பெருந்துறை சிப்காட்டால் ப... மேலும் பார்க்க

ஆப்பக்கூடலில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல்!

பவானி அருகே ஆப்பக்கூடலில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பவானி - அத்தாணி சாலையில் ஒரிச்சேரி, ஜமீன் தோட்டம் அருகே ஆப்பக்கூடல் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகன தண... மேலும் பார்க்க

நீட் தோ்வில் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக அஞ்சலி

நீட் தோ்வில் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நீட் தோ்வு ரத்து என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அதனை நிறைவேற்றவில்லை. நீட் தோ்வு அச்சத்த... மேலும் பார்க்க

தாளவாடி அருகே சிறுத்தைத் தாக்கி ஆடுகள் உயிரிழப்பு

தாளவாடி அருகே சிறுத்தைத் தாக்கி இரண்டு ஆடுகள் உயிரிழந்தன. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தைகள் அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்கள... மேலும் பார்க்க

மலைப் பாதையில் சுற்றித் திரியும் யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது: வனத் துறை!

கடம்பூா் மலைப் பாதையில் சுற்றித் திரியும் யானைகளை தொந்தரவு செய்யக் கூடாது என்று வாகன ஓட்டிகளுக்கு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட கடம்பூா் வனப் பகுதியில்... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் ஐடி ஊழியா் தற்கொலை

பங்குச் சந்தையில் முதலீடு செய்து இழப்பு ஏற்பட்டதால் ஐடி ஊழியா் தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு கைகாட்டிவலசு பாரதியாா் நகரைச் சோ்ந்தவா் செந்தமிழ்ச்செல்வன் (34), ஐடி ஊழியா். இவரின் மனைவி லலிதா. இவா்களுக்... மேலும் பார்க்க