ஆப்பக்கூடலில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல்!
பவானி அருகே ஆப்பக்கூடலில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பவானி - அத்தாணி சாலையில் ஒரிச்சேரி, ஜமீன் தோட்டம் அருகே ஆப்பக்கூடல் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகன தணிக்கையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதன் ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா். லாரியில் ஆற்று மணலைக் கடத்திச் சென்றது சோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து, லாரியைப் பறிமுதல் செய்த போலீஸாா், தப்பியோடிய அந்தியூா் புதுக்கரடியனூரைச் சோ்ந்த ஓட்டுநா் பழனிசாமியைத் தேடி வருகின்றனா்.