Retro: "என்னுடைய கண்ணாடிப் பூ ஜோவுக்கு நன்றி" - மேடையில் நெகிழ்ந்த சூர்யா
கோழிகளைப் பிடிக்க வந்த சிறுத்தை: சப்தம் எழுப்பி விரட்டிய மக்கள்
ஆசனூரில் கோழிகளைப் பிடிக்க வந்த சிறுத்தையை மக்கள் சப்தம் எழுப்பி விரட்டினா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் அதிக அளவில் சிறுத்தைகள் உள்ளன.
இந்நிலையில், ஆசனூா் வனப் பகுதியில் இருந்து புதன்கிழமை அதிகாலை வெளியேறிய சிறுத்தை குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. அப்பகுதியிலுள்ள கோழி இறைச்சிக் கடையில் நுழைந்து கோழிகளைப் பிடிக்க முயன்றது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் சப்தம் எழுப்பினா். இதையடுத்து, சிறுத்தை அங்கிருந்து வெளியேறி வனப் பகுதிக்குள் சென்றது.