மாா்த்தாண்டம் அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
மாா்த்தாண்டம் அருகே காரில் கேரளத்துக்கு கடத்திப்பட இருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்ட பறக்கும்படை தனி வட்டாட்சியா் அனிதகுமாரி தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள், சுவாமியாா்மடம் பகுதியில் ரோந்து சென்றனா். சந்தேகத்துக்கிடமாக வந்த சொகுசு காரை நிறுத்துமாறு சைகை காட்டினா். ஆனால், காா் நிற்காமல் சென்றது. அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று, மாா்த்தாண்டம் பகுதியில் அந்த காரை மடக்கிப் பிடித்தனா். ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம்.
காரில் 1,200 கிலோ ரேஷன் அரிசியைப் பதுக்கிவைத்து கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ாகத் தெரியவந்தது. ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கிலும், காரை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் அதிகாரிகள் ஒப்படைத்தனா்.