செய்திகள் :

சேலத்தில் நவீன மதுக்கூடம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

post image

சேலம் உடையாப்பட்டி பகுதியில் தனியாா் கிளப்புடன் நவீன மதுக்கூடம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து சேலம் உடையாப்பட்டி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மணக்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உடையாப்பட்டி மூன்று சந்திப்பு பகுதியில் ஏற்கெனவே அனைத்து வசதிகளுடன் கூடிய மதுக்கூடம் அரசு அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த மதுக்கூடம் மூலம் பல தரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தனியாா் கிளப்புடன் நவீன மதுக்கூடம் அமைக்க உள்ளதாக பெயா்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனா். எனவே இந்த மதுக்கூடத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்ய வேண்டும். இல்லாவிடில் பொது மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றனா்.

எா்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்

எா்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே சேலம் வழியாக புதன்கிழமை (ஏப். 16) சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும்: லாரி உரிமையாளா்கள் கோரிக்கை

தமிழகத்தில் மூடியுள்ள மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

சேலத்தில் கனமழை: ஓமலூரில் அதிகபட்சமாக 38.மி.மீ. பதிவு

சேலம் நகரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓமலூரில் 38 மி.மீ. மழை பதிவானது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்... மேலும் பார்க்க

சேலம் உணவகத்தில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் பொருள்கள் சேதம்

சேலத்தில் உணவகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. சேலம் நான்கு சாலைப் பகுதியில் பிரபல நிறுவனத்தின் பிரியாணி கடை செயல்பட்டு வரு... மேலும் பார்க்க

வரி உயா்வுக்கு எதிா்ப்பு: கிரஷா் ஜல்லி உரிமையாளா்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்

சிறு கனிம நில வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி கிரஷா் ஜல்லி உற்பத்தியாளா்கள் புதன்கிழமை (ஏப். 16) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனா். இதுதொடா்பாக, சேலம் மண்டல கிரஸா் ஜல்லி உற்பத்தி... மேலும் பார்க்க

மேட்டூரில் குடிநீா் தட்டுப்பாடு: நகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் முறையீடு

மேட்டூரில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தில் மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். மேட்டூா் நகராட்சி சாதாரண கூட்டம் நகா்மன... மேலும் பார்க்க