வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்
ARR: `உலக அரங்கில் நல்ல வாய்ப்புகளை தவற விட்டுவிட்டேன்!' - ஏ.ஆர்.ரஹ்மான்
'ரோஜா' படத்தில் அறிமுகமாகி கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட் முழுவதுமே கவனம் ஈர்த்தவர் ரஹ்மான். பாலிவுட்டில் 'Slumdog Millionaire' பட இசை அவரை ஹாலிவுட் வரை பிரபலப்படுத்தியது. இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பெற்றார். அப்போது ஹாலிவுட்டிலிருந்து நிறைய வாய்ப்புகள் வந்ததாகவும், ஆனால் அதை ரஹ்மான் தவறவிட்டதாகவும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
மேலும், நவீன தொழில்நுட்பங்களை உடனுக்குடன் கற்றுப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டும் ரஹ்மான், AI தொழில்நுட்பத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.

ஹாலிவுட் பட வாய்ப்புகள் குறித்துப் பேசியிருக்கும் அவர், "இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு உலகளவில் பிரபலமும், அங்கீகாரமும் கிடைப்பது சாதாரண விஷயமல்ல. 'ஜெய் ஹோ' பாடல் மூலம், அது எனக்குக் கிடைத்தது. ஆஸ்கர் விருதுகளும் கிடைத்தது. இந்தியர் அல்லாத என் இசையைக் கேட்டு வெளிநாட்டு மக்கள் ரசித்துப் பாராட்டினார்கள். அது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
அப்போது நிறைய வாய்ப்புகளும் எனக்குக் கிடைத்தது. ஆனால், தொடர்ச்சியாக இங்கு படங்கள் எனக்கு இருந்தன, அதுமட்டுமல்லாமல் கொஞ்சம் ஓய்வும் எனக்குத் தேவைப்பட்டதாக உணர்ந்து ஹாலிவுட் வாய்ப்புகளை மறுத்துவிட்டேன். உலக அரங்கில் என்னைக் கொண்டு செல்லவிருந்த அந்த நல்ல வாய்ப்புகளைத் தவறவிட்டதாகவே இப்போது நினைக்கிறேன்" என்றார்.

ஆஸ்கர் வென்றது குறித்துப் பேசியவர், "'Slumdog Millionaire' படத்தின் பின்னணி இசையை மூன்றே வாரங்களில் முடித்தேன். பொதுவாக 130 கீஸில் பாடல் பண்ணுவேன். ஆனால், ஆஸ்கர் வென்ற படத்திற்கு 17 கீஸ்தான் பண்ணினேன். அந்த இசையைக் கேட்ட ஆஸ்கர் ஏஜெண்ட் வியந்து பாராட்டினார். அதன்பிறகு ஆஸ்கருக்கு அனுப்பினோம். 'ரோஜா' படம் எப்படி என்னை மக்களிடம் கொண்டு சேர்த்ததோ, அதேபோல 'Slumdog Millionaire' படமும் எனக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது." என்று நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.
செயற்கை நுண்ணறிவு (AI) குறித்துப் பேசியிருக்கும் ரஹ்மான், "திறமையான பாடகர்களுக்கு மாற்றாக Ai இருக்க முடியாது. AI தொழில்நுட்பத்தை ஒரு தொழில்நுட்பக் கருவியாகப் பயன்படுத்தி வேலைகளை எளிதாக, சீக்கிரமாகச் செய்துகொள்ளலாம். ஆனால், அதுவே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும் என்று விட்டுவிட முடியாது. அதை நாம்தான் கையாள வேண்டும்.

அதேசமயம் AI நிறைய செலவுகளை குறைக்கிறது. பெரிய பட்ஜெட்டில் செய்யப்பட்ட பல விஷயங்களை எளிதில் AI மூலம் செய்து முடித்துவிடலாம். குறிப்பாக, சினிமா VFX குறைந்த பட்ஜெட்டில் எளிதாக செய்துவிட முடிகிறது. ஓர் அறையில் உட்கார்ந்தபடியே ஒரு முழு திரைப்படத்தையே எடுத்துவிடும் அளவிற்கு AI பயனுள்ளதாக இருக்கிறது. அதைச் சரியாகப் பயன்படுத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு AI தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். AI மூலம் ஒரு கதையைக் காட்சி வடிவாக உருவாக்கச் சொல்லி கற்றுக் கொடுக்கலாம், சிறு சிறு பயிற்சிகள் கொடுக்கலாம். குழந்தைகளின் அறிவை விரிவுபடுத்த அது ஒரு நல்ல ஐடியா" என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசரா