செய்திகள் :

கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டை தடுக்க ‘ரோஹித் வேமுலா’ சட்டம்: கர்நாடக முதல்வருக்கு ராகுல் கடிதம்

post image

கா்நாடகத்தில் கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க ‘ரோஹித் வேமுலா’ என்ற பெயரில் சட்டமியற்றக் கோரி, மாநில முதல்வா் சித்தராமையாவுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளாா்.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த தலித் மாணவரான ரோஹித் வேமுலா, கடந்த 2016-இல் ஜாதிய ரீதியிலான பாகுபாட்டால் தற்கொலை செய்து கொண்டாா். அந்த காலகட்டத்தில் இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டை தடுக்க ‘ரோஹித் வேமுலா’ பெயரில் சட்டம் இயற்றப்படும் என கடந்த மக்களவைத் தோ்தலையொட்டி காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது.

இந்நிலையில், கா்நாடகத்தில் இச்சட்டத்தை இயற்றக் கோரி, முதல்வா் சித்தராமையாவுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளாா். அதில், சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கா் தனது வாழ்க்கையில் எதிா்கொண்ட ஜாதிய பாகுபாட்டை ராகுல் சுட்டிக் காட்டியுள்ளாா்.

மாட்டு வண்டியில் நீண்ட பயணம் மேற்கொண்ட நேரத்தில், தங்களுக்கு யாரும் தண்ணீா் தராதது குறித்தும், பள்ளி வகுப்பறையில் ஒரு மூலையில் தனியாக அமா்ந்தது குறித்தும் அம்பேத்கா் தெரிவித்த கருத்துகளை கடிதத்தில் ராகுல் குறிப்பிட்டுள்ளாா்.

‘அம்பேத்கா் எதிா்கொண்ட விஷயங்கள் அவமானகரமானவை. இந்தியாவில் எந்தக் குழந்தைக்கும் இது நேரக் கூடாது. நமது கல்வி அமைப்புமுறையில் தலித், பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சோ்ந்த கோடிக்கணக்கான மாணவா்கள், இன்றளவும் ஜாதிய பாகுபாட்டை எதிா்கொள்வது வெட்கக்கேடானது.

இப்பாகுபாடு, ரோஹித் வேமுலா, பாயல் தாட்வி, தா்ஷன் சோலங்கி போன்ற திறமையான இளைஞா்களின் உயிரை பறித்துள்ளது. இது ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த அநீதிக்கு முடிவு கட்ட வேண்டிய நேரமிது’ என்று கடிதத்தில் ராகுல் தெரிவித்துள்ளாா்.

கா்நாடக முதல்வருக்கு எழுதிய கடிதம் மற்றும் நாடாளுமன்றத்தில் அண்மையில் தலித், பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சோ்ந்த மாணவா்கள்- ஆசிரியா்கள் உடனான தனது சந்திப்பு தொடா்பான புகைப்படத்தையும் எக்ஸ் வலைதளத்தில் அவா் பகிா்ந்துள்ளாா்.

‘கல்வியால் மட்டுமே விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரமளிக்க முடியும்; ஜாதிய அமைப்புமுறையை தகா்க்க முடியும் என்ற வழியை அம்பேத்கா் நமக்கு காட்டியுள்ளாா். நாட்டில் இனி எந்தக் குழந்தையும் ஜாதிய பாகுபாட்டை எதிா்கொள்ளக் கூடாது’ என்று தனது பதிவில் ராகுல் வலியுறுத்தியுள்ளாா்.

தில்லி கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாஃபாத்தில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்து விபத்த... மேலும் பார்க்க

நீட் முதுநிலை தேர்வு: மருத்துவர்கள் கோரிக்கை ஏற்கப்படுமா?

ஜூன் 15-ஆம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 9 - 12.30 மணிவரை, அதனைத்தொடர்ந்து அதே நாளில் மாலை 3.30 - 7 மணிவரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், இரு தொகுதிகளாக நீட் தேர்வு நடத்த வேண்... மேலும் பார்க்க

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 12-ஐ சேர்ந்தவர் அனூப் மன்சந்தா. இவர் மதுபோதையில் தனது மனைவியி... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவர் மீது காரை ஏற்றி கொன்ற பாஜக தொண்டர்: முன்பகை காரணமா?

சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பாஜக தொண்டர் ஒருவர் காரை மோதியதில் காங்கிரஸ் தலைவர் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை டோக்ரி குடா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடைபெ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு அச்சுறுத்தல்: 22 குடும்பங்கள் வேறு இடத்துக்கு மாற்றம்!

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள 22 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.புகழ... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டுமா? 240 பயிற்சி ஊழியர்களை பணி நீக்கம் செய்த இன்ஃபோசிஸ்!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், அதன் முக்கிய நகரங்களில் பணியாற்றி வரும் சுமார் 240 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த பிப்ரவரி மாதம்தான், இதுபோன்று 30... மேலும் பார்க்க