செய்திகள் :

Janani: 'Now and Forever!' - விமானியைக் கரம் பிடிக்கும் நடிகை ஜனனி

post image

இயக்குநர் பாலாவின் 'அவன் இவன்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஜனனி. இத்திரைப்படத்தை தொடர்ந்து அசோக் செல்வனுடன் அவர் நடித்திருந்த 'தெகிடி' திரைப்படமும் மக்களிடம் பெரிதளவில் வரவேற்பை பெற்றது. நடிகை ஜனனிக்கும் சாய் ரோஷன் ஷ்யாம் என்பவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு அறிவித்திருக்கிறார் ஜனனி.

Actress Janani
Actress Janani

சாய் ரோஷன் ஷ்யாம் ஒரு விமானி. அது தொடர்பான பதிவுகளையும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் போட்டிருக்கிறார். சினிமாவை தாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஜனனி பங்கேற்றிருக்கிறார் . அதிலும் மூன்றாவது ரன்னர் அப்பாக வந்திருந்தார்.

மீடியா கனவுடன் முதலில் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்தார் ஜனனி. மாடலிங் பக்கம் இருந்த சமயத்திலேயே 'திரு திரு துரு துரு' திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனை தாண்டி கெளதம் மேனனின் 'விண்ணை தாண்டி வருவாயா' திரைப்படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

Actress Janani
Actress Janani

தமிழ் திரைப்படங்களை தாண்டி சில மலையாள திரைப்படங்களிலும் ஜனனி நடித்திருக்கிறார். ஜனனிக்கும் சாய் ரோஷன் ஷ்யாமுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கும் நிலையில், தமிழ் திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Retro: "`மெளனம் பேசியதே' படம் பிடிக்க இதுவும் ஒரு காரணம்"- ரகசியம் பகிரும் கார்த்திக் சுப்புராஜ்

சூர்யா - பூஜா ஹெக்டே நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. என்னுடைய கண்ணாடி பூவேஇதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், "ரெட்ரோ எ... மேலும் பார்க்க

Retro: "'உங்க மகனுக்கு சினிமாவுல நடிக்க ஆர்வம் இருக்கான்னு டைரக்டர் கேட்டார்" - சிவகுமார் பேச்சு

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள லவ் ஆக்ஷன் திரைப்படம் ரெட்ரோ வரும் மே 1ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்துக்கான இசைவெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் ... மேலும் பார்க்க

Retro Audio Launch: "இந்தப் படத்தில் 12 பாடல்கள்" - சந்தோஷ் நாராயணன் பேச்சு

சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார... மேலும் பார்க்க

`தம்பி பாலா ஹீரோவாக அறிமுகமாகும் படம் விரைவில் திரையில்...' - ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி!

`கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. `குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சி ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். இதையெல்லாம் தாண்டி பல கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த... மேலும் பார்க்க

Retro: பாடகராக சூர்யா கொடுத்த சர்பிரைஸ்; வெளியானது ரெட்ரோ ட்ரெய்லர்!

நடிகர் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ரெட்ரோ. வரும் மே 1ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, நாசர், கருணாகரன், ஸ்வாசிகா, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம... மேலும் பார்க்க

Naangal Review: டாக்சிக் தந்தையும் பாதிக்கப்படும் மகன்களும்! எதார்த்தம் பேசும் படைப்பு ஈர்க்கிறதா?

1998 காலகட்டத்தில் ஊட்டியில் தனியார்ப் பள்ளி ஒன்றை நடத்துவதோடு, அப்பள்ளிக்கு முதல்வராகவும் உள்ளார் அப்துல் ரஃபே. அவரது மனைவி பிரிந்துவிட்டதால், மகன்கள் மிதுன், ரிதிக் மோகன், நிதின் தினேஷ் ஆகியோருடன் வ... மேலும் பார்க்க