செய்திகள் :

ஜிங்குச்சா... தக் லைஃப் முதல் பாடல் அறிவிப்பு!

post image

நடிகர் கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் தக் லைஃப் படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பின் இணையும் திரைப்படம் ‘தக் லைஃப்’.

நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், நாசர், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு துவங்கப்பட்டது. சென்னை, தில்லி, ரஷியா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பு கடந்த செப்டம்பரில் நிறைவடைந்தது.

படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு டீசரில் கமல், சிம்பு ஆகியோரின் தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

படம் ஜூன் 5 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி இன்று அறிவிக்கப்பட்டது.

’ஜிங்குச்சா’ எனும் இந்தப் பாடலை கமல்ஹாசன் எழுதியுள்ளார். பாடல் ஏப். 18 அன்று வெளியாகவுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி

பலத்த மழையால் ஓவா்கள் எண்ணிக்கை 14 ஆகக் குறைக்கப்பட்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸ்-ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பெங்களூா் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப். மு... மேலும் பார்க்க

கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது!

{"@context":"https://schema.org","@type":"VideoObject","name":"videoplayback1","description":"","thumbnailUrl":[["https://video.gumlet.io?68025a7efc3cb0b323921d4a/680257763ab3a7b826c2fd9e/thumbnail-1-... மேலும் பார்க்க

வெப்பம் தணித்த கோடை மழை!

{"@context":"https://schema.org","@type":"VideoObject","name":"videoplayback1","description":"","thumbnailUrl":[["https://video.gumlet.io?680257763ab3a7b826c2fd9e/680257763ab3a7b826c2fd9e/thumbnail-1-... மேலும் பார்க்க

சம்பவம் காத்திருக்கு... வெளியானது ரெட்ரோ டிரைலர்!

சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ரெட்ரோ திரைப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர்... மேலும் பார்க்க