வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்
சுந்தர். சி இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி?!
சுந்தர். சி இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் கார்த்தி மெய்யழகன் திரைப்படத்திற்குப் பின், ’வா வாத்தியர்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வருகிற மே மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.
அடுத்ததாக பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் - 2 படத்தில் நடித்து வரும் கார்த்தி தனது 29-வது படமாக டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
ராமேஸ்வரத்தை பின்னணியாகக் கொண்ட கேங்ஸ்டர் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில், சர்தார் - 2 படத்திற்குப் பிறகு இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரண்மனை - 4, மதகஜராஜா என தொடர் வெற்றிகளுக்குப் பின்னர் கேங்கர்ஸ் படத்தை இயக்கி நடித்துள்ள சுந்தர். சி அடுத்ததாக மூக்குத்தி அம்மன் -2 படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தை முடித்த பின்னர் அவர் கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளனர்.
இந்தாண்டு முடிவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.