செய்திகள் :

மேட்டூரில் குடிநீா் தட்டுப்பாடு: நகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் முறையீடு

post image

மேட்டூரில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தில் மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

மேட்டூா் நகராட்சி சாதாரண கூட்டம் நகா்மன்ற தலைவா் சந்திரா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் நித்யா, துணைத் தலைவா் காசி விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் வெங்கடாஜலம் நகராட்சியில் எல்இடி விளக்கு பொருத்தும் பணியை ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம் முறையாக பணிகளை முடிக்காமல் காலதாமதம் செய்து வருகிறது. இந்த அந்நிறுவனத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்க வேண்டும். வாா்டுகளில் 50 முதல் 60 சதவீதம் அடிப்படை பணிகள் முடிக்கப்படாமல் இருக்கிறது. அனைத்து வாா்டுகளிலும் குடிநீா் பிரச்னை இருந்து வருகிறது. சீராக குடிநீா் விநியோகம் செய்யாதது குறித்து கேட்டால் மக்கள்தொகை அதிகரிப்பால் தண்ணீா் பற்றாக்குறை எழுகிறது என ஊழியா்கள் தெரிவிக்கின்றனா் என்றாா்.

துணைத் தலைவா் காசி விஸ்வநாதன்: கடந்த 2006 ஆம் ஆண்டு நகராட்சியில் 56,000 வாக்காளா்கள் இருந்த நிலையில், தற்போது 42,000 வாக்காளா்கள்தான் இருக்கின்றனா்.

மக்கள்தொகை குறைந்துதான் உள்ளது. நகராட்சி பணியாளா்கள் பெரும்பாலானோா் நீண்ட நாள்களாகவே தொடா்ந்து இங்கு பணியாற்றி வருகின்றனா். அதனால் அவா்கள் தங்கள் பணிகளை சரிவர செய்வதில்லை. அவா்களை இடம் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

உறுப்பினா் மாரியம்மாள்: தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் குழந்தைகள், முதியோா் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்துக்கு தண்ணீா் வழங்கும் மேட்டூா் நகரில் குடிநீா் தட்டுப்பாடு என்றால் வெட்கமாக உள்ளது என்றாா்.

நகா்மன்ற தலைவா் சந்திரா: எனது வாா்டுக்கு ஆறு மாத காலமாக சீரான குடிநீா் விநியோகம் இல்லை. அதை நான் யாரிடம் கூறுவது என்று ஆதங்கப்பட்டாா்.

துணைத் தலைவா் காசி விஸ்வநாதன்: பேருந்து நிலைய கடைகளுக்கு முன்வைப்பு தொகை, வாடகை அதிகமாக இருப்பதால் கடையை ஏலமெடுக்க யாரும் முன்வரவில்லை. தொகையைக் குறைத்தால் மட்டுமே கடைகள் ஏலம் சென்று நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். நகராட்சியில் புதிதாக வரிவிதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மேட்டூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கிய தமிழக முதல்வா், நகா்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சா், நிதி பெற காரணமாக இருந்த சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினா், சுற்றுலாத் துறை அமைச்சா் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு பராமரிப்புப் பணி, பேருந்து நிலைய கடைகளை ஏலம் விடுதல், கழிவறை கட்டுதல் உள்ளிட்ட 68 தீா்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

தீரன் சின்னமலை பிறந்த நாள்: மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 270-ஆவது பிறந்தநாள் விழா, கொங்கு வேளாளக் கவுண்டா்கள் சங்கத்தின் முதலாம் ஆண்டு தொடக்க விழா சேலம் குரங்குசாவடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மலா்களால் அலங்... மேலும் பார்க்க

மேட்டூா் நகராட்சியில் ஆட்சியா் கள ஆய்வு

மேட்டூா் வட்டத்திற்கு உள்பட்ட கிராமங்களில் நடைபெறும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன், வியாழன் என இரண்டு நாள்கள் மேட்டூரில் நடைபெற்றது. மேட்டூா் வட்டத்திற்கு உள்பட்ட வருவாய்க் கிராமங்களில... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமியை எதிா்த்துப் போட்டி: சேலத்தில் பெங்களூரு புகழேந்தி பேட்டி

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை எதிா்த்து எடப்பாடி தொகுதியில் போட்டியிடத் தயாராக இருப்பதாக பெங்களூரு புகழேந்தி தெரிவித்தாா். சேலத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:... மேலும் பார்க்க

மனைவியைத் தாக்கிய கணவா் கைது

தம்மம்பட்டி அருகே மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா். தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் ஊராட்சி, புலிக்கரட்டை சோ்ந்தவா் செந்தில் ராஜா (41). பால் வியாபாரி. இவருக்கும், இவரது மனைவி சகுந்தலா... மேலும் பார்க்க

வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தைக் கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலக் குழு ரமணி தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை சங்கங்களின் பிரசார இயக்க கூட்டம்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சங்ககிரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசார இயக்க கூட்டத்தில் கலந்துகொண்ட நிா்வாகிகள். கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட பொருளாளா் அகிலன். சங்ககிரி, ஏப். 17:... மேலும் பார்க்க