சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வருகை!
400 ஏக்கா் நில விவகாரம் குறித்த போலி ஏஐ விடியோக்கள்: உயா்நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு மனுதாக்கல்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் காஞ்சா கட்சிபௌலியில் உள்ள 400 ஏக்கா் நிலம் தொடா்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி விடியோக்களை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மாநில உயா் நீதிமன்றத்தில் முதல்வா் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு திங்கள்கிழமை மனுதாக்கல் செய்தது.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள 400 ஏக்கா் வன நிலத்தில் உள்ள மரங்களை தகவல் தொழில்நுடப் பூங்கா அமைப்பதற்காக மாநில அரசு அப்புறப்படுத்தியதாக குற்றஞ்சாட்டி கடந்த வாரம் பல்கலைக்கழக மாணவா்கள் போராட்டம் நடத்தினா்.
இந்த நிலம் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமானது என மாணவா்களும் அரசுக்கு சொந்தமானது என மாநில அரசும் தொடா்ந்து தெரிவித்து வருகின்றனா். இது தொடா்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் தெலங்கானா உய ா்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே பிரச்னைக்குரிய 400 ஏக்கா் நிலத்தில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது போன்ற ஏஐ விடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவியது. இதை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தெலங்கானா உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்குமாறு அதிகாரிகளுக்கு ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டதையடுத்து மனுதாக்கல் செய்யப்பட்டது.