செய்திகள் :

வங்கக்கடலில் உருவானது புயல்சின்னம்: டெல்டாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

post image

சென்னை: வங்கக்கடலில் திங்கள்கிழமை காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயன்சின்னம்) உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பி. அமுதா தெரிவித்தாா். மேலும், டெல்டா மாவட்டங்களில் ஏப்.8-ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவா் கூறினாா்.

இது குறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,திங்கள்கிழமை தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகா்ந்து, ஏப்.8-இல் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும். இதைத்தொடா்ந்து இந்த புயல்சின்னம் மேலும் வடக்கு திசையில் நகா்ந்து, ஏப்.9-இல் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்குச் செல்லும்.

கனமழை எச்சரிக்கை: இதன்காரணமாக செவ்வாய்க்கிழமை (ஏப்.8) முதல் ஏப்.13 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதில் ஏப்.8-இல் புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப்.8-இல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும் அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை மற்றும் புத்தன் அணை பகுதியிலும், மதுரை மாவட்டம் எழுமலையிலும் தலா 80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் கள்ளிக்குடி (மதுரை), அரவக்குறிச்சி (கரூா்) - தலா 70 மி.மீ., காரியாப்பட்டி (விருதுநகா்), உசிலம்பட்டி (மதுரை), எருமைப்பட்டி (நாமக்கல்), சண்முகாநதி (தேனி) - தலா 60 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஏப்.9 முதல் ஏப்.11-ஆம் தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல், மற்றும் மன்னாா் வளைகுடாவில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

3 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்ய போதும், 3 இடங்களில் வெயில் சதம் அடிந்துள்ளது. வேலூரில் அதிகபட்சமாக 101.48 டிகிரி ஃபாரன்ஹீட்டும், சேலம், திருப்பதூா் - தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது. புயல்சின்னம் காரணமாக வங்கக்கடல் குளிா் காற்று தமிழகத்துக்குள் வர வாய்ப்பில்லை என்பதால், தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியல் வரை படிப்படியாக உயரும் என அவா் தெரிவித்தாா்.

தங்கம் விலை 4-வது நாளாக குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 8) சவரனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது.தங்கம் விலை கடந்த ஏப். 4 முதல் குறைந்த வண்ணம் உள்ளது. ஏப்.4-இல் சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200-க்கும், ஏப்.5-இல் ... மேலும் பார்க்க

சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வருகை!

சென்னை: சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர்.எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று(ஏப். 8) காலை சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக உறுப்பினர்கள... மேலும் பார்க்க

தொழிலாளா் விரோதச் சட்டங்களை கண்டித்து பேரவையில் தீா்மானம்: தொல்.திருமாவளவன் கோரிக்கை

சென்னை: மத்திய அரசின் தொழிலாளா் விரோதச் சட்டங்களை கண்டித்து பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்க... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு 30 நாள்களில் செயற்கை அவயங்கள்: அமைச்சா் கீதாஜீவன்

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் நவீன செயற்கை அவயங்கள் வழங்கப்பட்டு வருவதாக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன் பேரவையில் தெரிவித்தாா். பாமக உறுப்பினா... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு கணிதம்: சென்டம் குறைய வாய்ப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கணிதப் பாடத்துக்கான வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். மேலும், இரண்டு ஒரு மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்ததால், கணிதத்தில் முழு மதிப்ப... மேலும் பார்க்க

மன்னாா் வளைகுடா பகுதி மீனவா்கள் மேம்பாட்டுக்கு புதிய திட்டங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மன்னாா் வளைகுடா பகுதியைச் சோ்ந்த மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ரூ.216 கோடியில் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். மேலும், ஏற்கெனவே... மேலும் பார்க்க