சேலத்தில் அரசு கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு இளைஞா் தற்கொலைக்கு முயற்...
தங்கம் விலை 4-வது நாளாக குறைவு: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 8) சவரனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த ஏப். 4 முதல் குறைந்த வண்ணம் உள்ளது. ஏப்.4-இல் சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200-க்கும், ஏப்.5-இல் சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கும் விற்பனையானது.
அதைத்தொடா்ந்து திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.66,280-க்கு விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்க்கிழமை) சவரனுக்கு ரூ. 480 குறைந்து ரூ. 65,800-க்கும் கிராமுக்கு ரூ. 60 குறைந்து ரூ. 8,225-க்கும் விற்பனை செய்யப்படுகிறது
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் வரி விதித்ததையடுத்து, உலகளவில் தங்கம் விலை குறையத் தொடங்கியுள்ளது.
இதன்மூலம் தங்கம் விலை கடந்த 4 நாள்களில் சவரனுக்கு ரூ.2,680 குறைந்துள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.102-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 குறைந்து ரூ.1,02,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வருகை!