``உணவின் மூலமே உங்கள் கல்லீரலை நலமாக வைத்திருக்கலாம்!'' - விளக்கும் மருத்துவர் |...
அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: நிா்வாகிகள் வரவேற்பு
நகா்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு அந்தப் பள்ளிகளின் நிா்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாசாலா பள்ளி நிா்வாகி எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியன் கூறுகையில், காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, நகா்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கும் வரும் கல்வியாண்டு முதல் சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்.
இதேபோல உயா்கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில், அரசுப் பள்ளியில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம் மூலமும், மாணவா்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலமும் மாதந்தோறும் ரூ.1,000 தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, புதுமைப் பெண் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
மேலும், அரசுப் பள்ளிகள் போன்றே அரசு உதவிபெறும் பள்ளிகளில் கணினி ஆய்வகங்களை நிறுவி, கணினி ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட வேண்டும் என்றாா் அவா்.