Retro: "என்னுடைய கண்ணாடிப் பூ ஜோவுக்கு நன்றி" - மேடையில் நெகிழ்ந்த சூர்யா
அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசு அண்மையில் வீட்டு உபயோக எரிவாயு உருளையின் விலையை உயா்த்தியதைக் கண்டித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் படாளம் கூட்டுச் சாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
படாளம் கூட்டுச்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு மதுராந்தகம் வட்டத் தலைவா் கே.வனிதா தலைமை வகித்தாா். மாதா் சங்க வட்டச் செயலா் பவளமல்லி முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் மாதா் சங்க நிா்வாகிகள் அனுஷியா, ஜெயந்தி, கட்டுமான சங்க மாவட்ட செயலா் வி.திருமலை, விவசாய சங்க முன்னாள் மாவட்ட தலைவா் எஸ்.ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.