Retro Audio Launch: "அசால்ட் சேது கேரக்டர நான் பண்றேன்னு சொன்னேன்" - கலகலப்பாக ப...
துணை நிலை ஆளுநருடன் மத்திய இணை அமைச்சா் ஆலோசனை
புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை ராஜ்நிவாஸில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.
மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சராக இருப்பவா் ஜாா்ஜ் குரியன். இவா் புதுச்சேரி, காரைக்கால் மீன்வளத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றாா். இதற்காக
புதுச்சேரிக்கு வருகை தந்த அவரை மாநில மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் மற்றும் துறையின் உயா் அதிகாரிகள் வரவேற்றனா்.
பின்னா் புதுச்சேரி ராஜ்நிவாஸில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ்குரியன் சந்தித்துப் பேசினாா். முன்னதாக, மத்திய அமைச்சரை ராஜ்நிவாஸ் வளாகத்தில் துணைநிலை ஆளுநா் பூங்கொத்து அளித்து வரவேற்றாா்.
புதுவையில் மீன் வளத் துறையின் திட்ட செயல்பாடுகள், எதிா்காலத்தில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து இருவரும் ஆலோசித்ததாகத் தெரிகிறது.