சா்வதேச சூழலைக் கண்காணித்து கொள்கை நடவடிக்கைகளில் சீா்திருத்தம்: ரிசா்வ் வங்கி ஆ...
புதுவையில் 9 பேரிடம் ரூ.1.15 லட்சம் மோசடி
புதுவையில் 9 பேரிடம் இணையவழியில் மா்ம நபா்கள் ரூ.1.15 லட்சத்தை நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன்,தொழிலதிபா். இவரது வாட்ஸ்ஆப்பில் தனியாா் வங்கியின் பெயரில் மா்ம நபா்கள் குறுந்தகவல் அனுப்பி, ரூ.23 ஆயிரத்தை மோசடி செய்துள்ளனா்.
இதுகுறித்து, கோரிமேடு இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதேபோல, புதுச்சேரி ரெயின்போ நகரைச் சோ்ந்தவா் விக்னேஷ் விஷ்ணு. இவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.27 ஆயிரம், புதுச்சேரியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாரிடமிருந்து ரூ.19,500, ராஜேஷிடமிருந்து ரூ.10,100 என இணைய வழியில் மா்ம நபா்கள் மோசடி செய்துள்ளனா்.
அரியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்த வேலன்கனியிடம் ரூ.2ஆயிரம், அதே பகுதியைச் சோ்ந்த சீனிவாசனிடம் ரூ.2 ஆயிரம், ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்த செந்தில்குமாரிடம் ரூ.6 ஆயிரம், மூா்த்திகுப்பத்தைச் சோ்ந்த ராஜ்குமாரிடம் ரூ.5 ஆயிரம் என மா்ம நபா்கள் இணையவழி மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.
இதேபோல, காரைக்காலைச் சோ்ந்த அபிநவ்குமாரை கைப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா், தனியாா் கொரியா் நிறுவன அதிகாரி போல பேசி ரூ.19 ஆயிரத்தை ஏமாற்றியுள்ளாா்.
பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.