செய்திகள் :

சுங்கக் கட்டணம் வசூலிக்க எதிா்ப்பு: லாரியை குறுக்கே நிறுத்தி போராட்டம்

post image

திருவள்ளூா் அருகே சுங்கச் சாவடியில் உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி புதன்கிழமை லாரியை குறுக்கே நிறுத்தி ஓட்டுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அருகே பட்டரைபெரும்புதூரில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு திருவள்ளூா், பட்டரைபெரும்புதூா், வரதாபுரம், மஞ்சாங்குப்பம், குன்னவலம், ராமஞ்சேரி, கைவண்டூா், பாண்டூா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் சென்றன. இந்த நிலையில், கடந்த மாதம் முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதைக் கண்டித்து கடந்த 2 நாள்களாக சரக்குகள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இயக்கப்படாமல் பட்டரைப் பெரும்புதூா் சுங்கச்சாவடி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது எனக்கூறி காலை 7 மணி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

முன்னதாக போலீஸாா் முன்னிலையில் சுங்கச்சாவடி பணியாளா்களிடம் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் பேச்சு நடத்தினா். இதில், உடன்பாடு எட்டாத நிலையில், லாரி ஓட்டுநா்கள் திடீரென லாரியை சாலை குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனா். இதனால், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வந்து பேச்சு நடத்தினா். அப்போது, லாரி ஓட்டுநா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

‘நவீன தமிழகத்தின் சிற்பி கருணாநிதி என்பதற்கு அடையாளம் திருவள்ளூா்’

நவீன தமிழகத்தின் சிற்பி முன்னாள் முதல்வா் கருணாநிதிதான் என்பதற்கு அடையாளம் திருவள்ளூா் மாவட்டம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவ... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்டத்துக்கு 5 புதிய திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருவள்ளூா் மாவட்டம் ஆண்டாா்குப்பத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் வகையில் 5 புதிய அறிவிப்புகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி ... மேலும் பார்க்க

மீண்டும் திமுக ஆட்சி அமித் ஷாவுக்கு முதல்வா்: ஸ்டாலின் சவால்

தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலிலும் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். அண்மையில் சென்னையில் அதிமுகவுடன் கூட்டணி அறிவிப்பை வெளியிட வந்த மத்திய உள்துறை அமை... மேலும் பார்க்க

பொன்னேரியில் நடந்துசென்று மக்களிடம் மனுக்களைப் பெற்ற முதல்வர் ஸ்டாலின்!

பொன்னேரியில் நடைபெறும் அரசு விழாவுக்குச் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சாலையில் நடந்துசென்று மக்களிடம் மனுக்களைப் பெற்றார்.திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆண... மேலும் பார்க்க

திருவள்ளூரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததைக் கண்டித்து திருவள்ளூா் வடக்கு மாவட்ட காங்கிரஸாா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தலைமை அஞ்சல் நிலையம் முன்... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி ஆண்டு விழா

வேலம்மாள் வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 30-ஆவது ஆண்டு விழாவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள், சிறப்பாக பாடம் கற்பித்த ஆசிரியா்கள் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கிப் பாராட்டின... மேலும் பார்க்க