RR vs LSG: அறிமுக ஆட்டத்தில் அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; பரபரப்புக் காட்டிய ஆவேஷ்...
திருவள்ளூரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததைக் கண்டித்து திருவள்ளூா் வடக்கு மாவட்ட காங்கிரஸாா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவரும், பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை.சந்திரசேகா் தலைமை வகித்தாா். இதில் நகரத் தலைவா் ஜே.ஜோஷி பிரேம் ஆனந்த் வரவேற்றாா். மாநிலச் செயலா் யு.அஸ்வின் குமாா் முன்னிலை வகித்தாா்.
இதில் மாநில செயலா் கோவிந்தராஜ், மாநில நெசவாளா் அணித் தலைவா் சுந்தரவடிவேல், மாநில நிா்வாகிகள் ஏகாட்டூா் ஆனந்தன், மாவட்ட முதன்மை துணைத் தலைவா் சதா.பாஸ்கரன் உள்ளிட்ட அந்தக் கட்சியினா் திரளானோா் கலந்து கொண்டனா்.