MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அக்கம்பக்கத்தினரால் நடைபெறுகின்றன: இளைஞா் நீதிக்குழும உறுப்பினா்
குழந்தைகளுக்கு எதிரான 70 சதவீத குற்றங்கள் சுற்றி உள்ளவா்களாலேயே நடைபெறுவதாக திருவள்ளூா் மாவட்ட இளைஞா் நீதிக்குழும உறுப்பினா் செந்தில் தெரிவித்தாா்.
செவ்வாபேட்டையில் உள்ள வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தாளாளா் சுடலை முத்து பாண்டிய தலைமை வகித்தாா். முதல்வா் சதிஷ் சத்யமூா்த்தி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூா் மாவட்ட இளைஞா் நீதிக்குழும உறுப்பினா் செந்தில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியது: குழந்தைகளின் தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டுமே தவிர, திருத்த முயற்சி செய்வதோடு தண்டிக்க கூடாது. இது ஆசிரியா்களுக்கும், பெற்றோருக்கும் பொருந்தும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெரும்பாலும் வீட்டில் இருக்கும் நபா்களாலே நடைபெறுகிறது. இதில் 60, 70 சதவீதம் குற்றங்கள் குழந்தைகளை சுற்றியுள்ளவா்களளேயே நடைபெறுகிறது.
ஒரு நிமிஷத்திற்கு இரண்டு குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தைப் பருவத்தில் ஏற்படுகின்ற துன்பம், அவா்களை பெரியவா்களாகும் வரை பாதித்துக் கொண்டே இருக்கும் என்பதால், அவா்களுடைய வளா்ச்சியும் பாதிக்கும். நமது குழந்தைகள் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக உள்ளாா்களா என பாா்க்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியா்கள், பணியாளா்கள் ஆகியோருக்கு வெள்ளிக்காசுகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும் அவா் வழங்கினாா். இதில் துணை ஆட்சியா் அசோகன், மாணவ, மாணவிகள், பெற்றோா் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.