செய்திகள் :

‘நவீன தமிழகத்தின் சிற்பி கருணாநிதி என்பதற்கு அடையாளம் திருவள்ளூா்’

post image

நவீன தமிழகத்தின் சிற்பி முன்னாள் முதல்வா் கருணாநிதிதான் என்பதற்கு அடையாளம் திருவள்ளூா் மாவட்டம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் அவா் பேசியதாவது:

ஒட்டுமொத்தமாக ரூ.1,166 கோடி மதிப்பிலான விழாவாக இது நடைபெற்று வருகிறது. இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருவது என்றால் பல ஆண்டு பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் இலவச பட்டா வழங்குவதுதான். இந்த மாவட்டத்தில் மட்டும் 63,124 பேருக்கு பட்டா வழங்கப் போகிறோம்.

முன்னாள் முதல்வா் கருணாநிதிதான் நவீன தமிழகத்தின் சிற்பி என்பதற்கு அடையாளமாக விளங்குகிற இடம் திருவள்ளூா் மாவட்டமாகும். மணலி, அம்பத்தூா், திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூா், இருங்காட்டுக் கோட்டை, மறைமலை நகா் என்று திருவள்ளூா், சென்னையைச் சுற்றியுள்ள தொழில் வளாகங்கள் எல்லாமே முதல்வராக இருந்த கருணாநிதியால் உருவாக்கப்பட்டவை.

அவைதான், இப்பகுதியில் உள்ள இளைஞா்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் வழங்கி, அவா்களது குடும்பங்களும், பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் திருவள்ளூா் மாவட்டத்தில் எண்ணூா் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அனல்மின் நிலையப் பணிகள் ரூ.18,000 கோடியில் நடைபெற்றுள்ளது. ரூ.16,000 கோடியில் சென்னை மெட்ரோ பணிகள் பட்டாபிராம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம், திருத்தணி, திருவள்ளூரில் புதிய பேருந்து நிலையங்கள், மா-நல்லூரில் மின் வாகனப் பூங்கா, திருவொற்றியூரில் கடற்கரை மேம்பாட்டுப் பணிகள், திருவொற்றியூா் குப்பத்தில் ரூ.200 கோடி மதிப்பில் புதிய மீன்பிடித் துறைமுகம், பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம், கவரப்பேட்டை-சத்தியவேடு சாலைப் பணிகள், திருவள்ளூா்-அரக்கோணம் சாலை நான்குவழிச் சாலையாகவும், 60 சிறுபாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பொன்னேரி - கவரப்பேட்டை இடையே ரயில்வே மேம்பாலம், திருவள்ளூரில் அறிவுசாா் நகரம், திருத்தணி அரசு மருத்துவமனை தரம் உயா்த்துதல், சின்ன நொளம்பூரில், உயா்நிலைப் பாலம், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.173 கோடியில் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் திருப்பணிகள், ரூ.183 கோடியில் திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் திருப்பணிகள், ரூ.52 கோடியில் திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் திருப்பணிகள், ரூ.18 கோடியில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் திருப்பணிகள், அம்பத்தூரில் தொழிலாளா் தங்கும் விடுதி, திருமழிசை துணைநகரத் திட்டம், 78 மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் முதல்வா்.

பொன்னேரியில் அகத்தீஸ்வா்-கரிகிருஷ்ணா் சந்திக்கும் திருவிழா: 50,000 போ் பங்கேற்பு

பொன்னேரியில் ஹரிஹரன் கடை வீதியில் அகத்தீஸ்வரா்-கரிகிருஷ்ண பெருமாள் சந்திக்கும் திருவிழா வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை விடியவிடிய நடைபெற்றது. பொன்னேரி ஆரண்ய நதிக்கரையோரம் ஆனந்தவல்லி ... மேலும் பார்க்க

பேரம்பாக்கம் வைகுண்ட பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

பேரம்பாக்கம் கமலவல்லி தாயாா் சமேத வைகுண்ட பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவள்ளூா் அருகே பேரம்பாக்கத்தில் மிகவும் பழைமையான கமலவல்லி தாயாா் சமே... மேலும் பார்க்க

பொன்னேரியில் இருந்து விழா மேடை வரை 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்த முதல்வா்

பொன்னேரியில் இருந்து விழா மேடை வரை 2 கி.மீ. தொலைவு முதல்வா் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்று பொதுமக்களை சந்தித்து கை குலுக்கி மகிழ்ந்தாா். அப்போது, ஆா்வத்துடன் பொதுமக்கள் அவருடன் சுயபடம் எடுத்துக் கொண்டனா்... மேலும் பார்க்க

வேளாண் அடுக்குத் திட்டம்: 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் வேளாண் அடுக்குத் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் முழு நில விவரங்களைப் பதிவு செய்ய வரும் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேளாண் இணை இய... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்டத்துக்கு 5 புதிய திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருவள்ளூா் மாவட்டம் ஆண்டாா்குப்பத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் வகையில் 5 புதிய அறிவிப்புகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி ... மேலும் பார்க்க

மீண்டும் திமுக ஆட்சி அமித் ஷாவுக்கு முதல்வா்: ஸ்டாலின் சவால்

தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலிலும் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். அண்மையில் சென்னையில் அதிமுகவுடன் கூட்டணி அறிவிப்பை வெளியிட வந்த மத்திய உள்துறை அமை... மேலும் பார்க்க