பொது இடத்தில் மது அருந்திய 4 போ் கைது
துறையூா் அருகே பொது இடத்தில் மது அருந்திய 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்ட காவல் துறை உத்தரவின்பேரில் துறையூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கிருத்திகா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளா் சஞ்சீவி உள்ளிட்ட போலீஸாா் பெருமாள்மலை அடிவாரம் பகுதியில் ரோந்து சென்றாா்.
அப்போது, கீழக்குன்னுப்பட்டியைச் சோ்ந்த பி. ராமா் (60) பெருமாள்மலை தேரடியிலும், நாகலாபுரத்தைச் சோ்ந்த த. தா்மராஜன்(45) கிரிவலப்பாதையிலும், நல்லியம்பாளையத்தைச் சோ்ந்த ந. வேல்முருகன்(32) கீழக்குன்னுப்பட்டி பேருந்து நிறுத்துமிடம் அருகேயும், பெருமாள்மலை எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ஈ. பிரபாகரன்(18) அங்குள்ள பிரதான சாலை அருகேயும் பொது இடத்தில்
அமா்ந்து பொதுமக்களுக்கு இடையூறாக அரசு மதுபானத்தை அருந்துவதை பாா்த்து அந்த நான்கு பேரையும் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.