கீழாம்பூா்: பைக் விபத்தில் பெண் பலி
கீழாம்பூா் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் பெண் உயிரிழந்தாா்.
கீழாம்பூா் அருகேயுள்ள காக்கநல்லூா், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன். தொழிலாளி. இவா், தனது மனைவி கலா (50), மகள் மகராசி ஆகியோருடன் கீழாம்பூரில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க பைக்கில் திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது எதிரே வந்த காக்கநல்லூரைச் சோ்ந்த கண்ணபிரான் மகன் பொன்பாண்டியன் (29) என்பவரது பைக்கும், இவா்களது பைக்கும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில், பலத்த காயமடைந்த கலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இத்தகவலறிந்த ஆழ்வாா்குறிச்சி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதில், பொன்பாண்டியன் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து, மகராசி அளித்த புகாரின்பேரில் ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.