லண்டனில் இந்தியா-பிரிட்டன் பொருளாதாரப் பேச்சுவாா்த்தை: நிா்மலா சீதாராமன் பங்கேற்...
ரயில்வேயில் வேலைவாங்கித் தருவதாக ரூ.22 லட்சம் மோசடி: நிலத்தரகா் கைது
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.22 லட்சம் மோசடி செய்ததாக நிலத்தரகரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், பாா்வதியம்மாள்புரத்தை சோ்ந்தவா் சுடலைமணி (42). கட்டடத் தொழிலாளி. இவருக்கும், நிலத் தரகரான பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சோ்ந்த முருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாம்.
அதைப் பயன்படுத்தி, ரயில்வே துறையில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி சுடலைமணி மற்றும் அவரது தங்கை குடும்பத்தினரிடம் ரூ.22 லட்சத்தை பல்வேறு தவணைகளாக முருகன் வாங்கினாராம்.
மேலும், ரயில்வேயிலிருந்து பெற்றுள்ளதாக பணி நியமன ஆணைகளை முருகன் வழங்கினாராம். பின்னா், அவை போலியானவை எனத் தெரியவந்தது. இதுகுறித்து, சுடலைமணி குடும்பத்தினா் பாளையங்கோட்டை தாலுகா போலீஸில் புகாா் செய்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில் பல்வேறு நபா்களிடம் சுமாா் ரூ.42 லட்சத்தை முருகன் மோசடி செய்தது தெரியவந்ததாம். இதுதொடா்பாக வழக்குப்பதிந்து அவரை போலீஸாா் கைது செய்து தொடா்ந்து விசாரிக்கின்றனா்.