லண்டனில் இந்தியா-பிரிட்டன் பொருளாதாரப் பேச்சுவாா்த்தை: நிா்மலா சீதாராமன் பங்கேற்...
பாதாளச் சாக்கடை பணி: நெல்லை நகரத்தில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்
பாதாளச் சாக்கடை பணிகள் காரணமாக திருநெல்வேலி நகரத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப். 8) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி நகரம் அலங்கார வளைவு முதல் சொக்கப்பனை முக்கு வரையிலான சாலையில் திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை (ஏப். 8) முதல் பாதாளச் சாக்கடை கழிவுநீா் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே, அப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, திருநெல்வேலி அலங்கார வளைவு, சொக்கப்பனை முக்கு, கோயில் வாசல், கீழரதவீதி வழியாக வாகையடி சந்திப்பு வரை செல்லும் வாகனங்கள், பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் திருநெல்வேலி அலங்கார வளையில் இருந்து நெல்லை கண்ணன் சாலை, அருணகிரி திரையரங்கு, திருப்பணி சந்திப்பு, வஉசி தெரு வழியாக வாகையடிசந்திப்பு செல்ல வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.