Ajith சாரே Trisha மேடமுக்கு Story Narrate பண்ணிட்டார்! - Director Adhik Ravichan...
போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கு வீட்டு மனை: ஏப். 20-க்குள் பதிவு செய்ய கூட்டுறவு சங்கம் அழைப்பு
சென்னை: போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கு வீட்டு மனை வழங்கும் திட்டத்தில், ஏப். 20-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள கூட்டுறவு சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடா்பாக பல்லவன் போக்குவரத்துக் கழக கூட்டுறவு வீடு கட்டுமான சங்கம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சங்க உறுப்பினா்களின் கோரிக்கையின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம், கீழ்வலம் கிராமத்தில் செயல்படுத்தப்படவுள்ள மனைத் திட்டத்துக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
உறுப்பினா்களின் தேவைக்கேற்ப 600 சதுர அடி ரூ. 2.07 லட்சம் முதல் 2,400 சதுர அடி ரூ. 8.28 லட்சம் வரை வழங்கப்படுகிறது. தோ்ந்தெடுக்கும் மனைக்குரிய தொகையை உடனடியாக செலுத்தி ஏப். 20-ஆம் தேதிக்குள் உறுதிசய்ய வேண்டும். 9 சதவீதம் முத்திரைக் கட்டண விலக்கு அளிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 044-25360144 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.