செய்திகள் :

தண்ணீர் பேரலுக்குள் 6 மாத குழந்தை மரணம்; தாயிடம் போலீஸார் தீவிர விசாரணை! - நடந்தது என்ன?

post image

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள குளவாய்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது: 29). இவர், மகராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குளவாய்பட்டியை சேர்ந்த லாவண்யா (வயது: 21) என்பரை திருமணம் செய்துள்ளர்.

இந்நிலையில், இவர்களுக்கு 6 மாதத்தில் ஆதிரன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்த தம்பதிகளிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், லாவண்யா தனது கணவரோடு கோபித்துக் கொண்டு அவரின் தந்தை வீடான புலியூருக்கு வந்து தங்கியுள்ளார்.

தண்ணீர் பேரல்

இந்நிலையில், தந்தை வீட்டில் தங்கி இருந்த லாவண்யா அதிகாலை 3 மணியளவில் வீட்டிற்கு வெளியில் பாத்ரூம் சென்றார். அப்போது, மர்ம நபர்கள் இரண்டு பேர் தனது வாயில் துணியை வைத்து அழுத்தி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க செயின் அறுத்து கொண்டும், வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை ஆதிரன் தூக்கிக்கொண்டும் சென்றுவிட்டதாக கூறி, மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, லாவண்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையை தேடியுள்ளனர். பின்னர், ஒரு மணி நேரம் கழித்து குழந்தை வீட்டிற்கு வெளியில் உள்ள தண்ணீர் பேரலில் இறந்து மிதந்துள்ளது. இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீரனூர் டி.எஸ்.பி மணிமாறன், இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் இறந்த குழந்தையின் உடலை மீட்டு உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி அபிஷேக்குப்தா சம்பவம் குறித்து கேட்டறித்து, விசாரணையை துரிதப்படுத்தி விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்நிலையில், அந்த அந்த குழந்தையின் தாயார் தான் குழந்தையை கொன்றிருக்க வேண்டும் என்று மணிகண்டன் உறவினர்கள் புகார் அளித்தனர்.

குழந்தை

அதனடிப்படையில், லாவண்யாவிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், சமீபத்தில் அந்த குழந்தைக்கு மருந்து கொடுக்கும் பொது உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாம். இதனால், திருச்சியில் உள்ள மருத்துவமனையில் குழந்தையை சேர்த்து, அவருக்கு ரூ. 5 லட்சம் வரை செலவு செய்து அவரை குணமாக்கி அழைத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த சூழலில் தான், அந்த ஆண் குழந்தை மர்மமான முறையில் இறந்துபோயுள்ளது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கீரனூர் காவல் நிலைய போலீஸார், அந்த குழந்தையின் தாய் லாவண்யாவிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். பிறந்து 6 மாதமே ஆன ஆண் குழந்தை ஒன்று மர்மமான முறையில் இறந்துபோயுள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

தென்காசி அருகே காரில் கஞ்சா கடத்தல்; பிரபல கஞ்சா ரவுடி கைது!

தென்காசி மாவட்டம் முழுவதும் கஞ்சாவிற்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் மீனாட்சிநாதன் ம... மேலும் பார்க்க

ராஜபாளையம்: `9-ம்வகுப்பு மாணவர் தூக்கிட்டு மரணம்' - போலீஸார் விசாரணை!

ராஜபாளையத்தில் 9-ம்வகுப்பு பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில்வே பாலம் அருகே உள்ள ஸ்ரீரங்கபாளையம் தெருவைச... மேலும் பார்க்க

போக்சோ வழக்கு: பிரபல மத போதகர் தலைமறைவு.. கோவையில் நடந்தது என்ன?

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது 37). இவர் காந்திபுரம் பகுதியில் உள்ள ஜெப கூடத்தில் மத போதகராக உள்ளார். மேலும் இவர் தன்னுடைய இசைக் கச்சேரிகள் மூலம் கிறிஸ்துவ சமுதாயத்தில் நன்... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் மனைவியை எரித்துக் கொன்ற போதை ஆசாமி - மணப்பாறையில் அதிர்ச்சி சம்பவம்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டி ஊராட்சி மாலைமடைப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னகவுண்டா் மகன் சின்னதம்பி (வயது: 62). இவரது மனைவி செல்லம்மாள் (வயது: 48). இவா்களது கூட்டு நிலத்தை தமிழ்நாடு... மேலும் பார்க்க

கடலூர்: மூன்று முறை கருக்கலைப்பு… ஆபாசமாகப் பேசி, காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த விசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். 32 வயதான இவர் அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற இளம்பெண்னை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தி... மேலும் பார்க்க

கடலூர்: `அவர் எனக்கும் புருஷன்தான்...’ - கணவரை உரிமை கொண்டாடிய அக்காவை கொலை செய்த தங்கை

கடலூர் சோழத்தரம் கிராமத்தை சேர்ந்தவர் மேகலைவன். இவருக்கு சரிதா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். சரிதாவின் மூத்த சகோதரியான சங்கீதாவும் அதே பகுதியில்தான் வசித்து வந்தார். சங்கீதாவின் கணவர... மேலும் பார்க்க