செய்திகள் :

ஜப்பானில் மாநாடு!

post image

நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் ஜப்பானில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான திரைப்படம் மாநாடு. 2021 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஆனது.

ரூ. 100 கோடி வரை வசூலித்து மீண்டும் சிம்புவின் திரை வாழ்க்கைக்கு வெளிச்சத்தைக் கொடுத்தது. நடிகர் எஸ். ஜே. சூர்யாவுக்கும் பெரிய ஹிட்டாக அமைந்தது.

முக்கியமாக, லூப் ஹோல் கதையில் படத்தின் திரைக்கதையை நான் லீனியர் பாணியில் அமைத்தது ரசிகர்களிடம் பெரிதாக வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், மாநாடு திரைப்படம் மே மாதம் ஜப்பான் நாட்டில் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ”நல்ல படம் என்பது ஒரு அழகிய பறவை போல. கண்டம் கடந்தும் நேசிக்கப்படும். மாநாடு தற்போது ஜப்பானில் மே மாதம் வெளியாக உள்ளது. இந்த லூப் ஹோல் திரைக்கதை ஜப்பானியர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஜன நாயகன் படப்பிடிப்பு அப்டேட்!

தேசிய ஹாக்கி சாம்பியன்...

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற 15-ஆவது சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் வாகை சூடிய பஞ்சாப் அணியினா். இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் 4-1 கோல் கணக்கில் மத்திய பிரதேசத்தை வீழ்த்தியது. 3-ஆவது இடத்துக்க... மேலும் பார்க்க

காதலரை அறிமுகப்படுத்திய நடிகை ஜனனி!

நடிகை ஜனனிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.மாடலிங் துறையில் 100-க்கும் விளம்பரங்களில் நடித்து பிரபலமடைந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜனனி. சிறிய பாத்திரங்களில் நடித்துவந்த நடிகை ஜன... மேலும் பார்க்க

ஜிங்குச்சா... தக் லைஃப் முதல் பாடல் அறிவிப்பு!

நடிகர் கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் தக் லைஃப் படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பின் இணையும் திரைப்படம் ‘தக் லைஃப்’. நடிகர்க... மேலும் பார்க்க

ரெட்ரோ டிரைலர் வெளியீட்டு விழா அறிவிப்பு!

சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.ரெட்ரோ திரைப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக எடுக... மேலும் பார்க்க