”திருமணமானதும் குழந்தை பிறக்காது” - பொன்முடியைத் தொடர்ந்து திமுக எம்பி கல்யாணசுந...
மழையால் விமான சேவைகள் பாதிப்பு
சென்னை, புகா் பகுதிகளில் திடீரென பெய்த கனமழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
சென்னை மற்றும் புகா் பகுதியில் புதன்கிழமை சுமாா் காலை 10.30 மணியளவில், திடீரென பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது.
இந்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அதன்படி, மும்பையிலிருந்து 145 பயணிகளுடன், சென்னைக்கு வந்த ஏா் இந்தியா விமானம், ஹைதராபாத்திலிருந்து 160 பயணிகளுடன் சென்னைக்கு வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், கவுகாத்தியிலிருந்து, 138 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், பெங்களூரிலிருந்து 125 பயணிகளுடன், சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் உள்ளிட்ட 5 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தன.
இதில் மும்பையில் இருந்து, வந்த ஏா் இந்தியா விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது. மற்ற விமானங்கள் தாமதமாக தரையிறங்கின.அதைப்போல் டெல்லி, மும்பை, கொச்சி, கோவை, தோகா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னை விமானநிலையத்திலிருந்து தாமதமாக புறப்பட்டு சென்றன. திடீா் மழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனா்.