ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம்! - உத்தவ் தாக்கரே
”திருமணமானதும் குழந்தை பிறக்காது” - பொன்முடியைத் தொடர்ந்து திமுக எம்பி கல்யாணசுந்தரம் சர்ச்சை பேச்சு
கும்பகோணம் தொகுதிக்கு உட்பட்ட, சேஷம்பாடி கிராமத்தில் 261 பேருக்கு, கலைஞரின் கனவு இல்லத்திற்கான வேலை தொடங்குவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், ராஜ்யசபா எம்.பி., கல்யாணசுந்தரம், கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன், அரசு அதிகாரிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர் கோவி.செழியன் உள்ளிட்டோர் பயனாளிகளுக்குக் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணையை வழங்கினர்.
இதில் தி.மு.க-வின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளரும், ராஜய்சபா எம்.பி-யுமான கல்யாணசுந்தரம் பேசுகையில், "அரசு எவ்வித திட்டம் போட்டாலும், அரசுக்கு நற்பெயரை வாங்கிக்கொடுப்பது அரசு அதிகாரிகள்தான்.
கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பெரியவர் ஒருவர், கும்பகோணத்தில் முறையான குடிநீர் இல்லை, சாலை வசதி இல்லை, தெரு விளக்கு இல்லை எனச் சண்டை போட்டார்.
எல்லாம் உடனே கிடைத்து விடாது. திருமணம் ஆனால் கூட பத்து மாதத்திற்குப் பிறகுதான் குழந்தை பிறக்கும்.
திருமணத்திற்கு முன்பே, திருமணம் நடக்கின்ற அன்றே குழந்தை பிறக்க வேண்டும் என்றால், அது வேறு விதமாகத்தான் பிறக்கும்.
முன் கூட்டியே காதல் செய்து, கர்ப்பமானால் திருமணம் ஆகும் அன்றே குழந்தை பிறக்கும். எனவே, வருபவர்களிடம் ஆத்திரப்பட்டுப் பேசுவதால், கோபப்பட்டுப் பேசுவதால், திட்டி பேசுவதால் நல்ல விஷயங்கள் செய்ய வருபவர்களுக்கு ஆர்வம் குறைந்து விடும்.
அவர்களிடம் அனுசரித்து, 'வேலை எல்லாம் செய்து கொடுங்கள்'னு கேட்கனுமே தவிர, விதண்டாவாதமாகப் பேசக்கூடாது.

உங்களுக்கு வீடுகள் கட்டி தர வேண்டும் எனச் சட்டம் இல்லை. உங்களின் தேவைகளை அறிந்து கடமையைச் செய்ய வந்துள்ளோம்" என்றார்.
இப்படி கல்யாணசுந்தரம் சர்ச்சையாகப் பேசிக்கொண்டிருக்கச் சட்டென முகம் சுழித்த அமைச்சர் கோவி.செழியன், புத்தகம் ஒன்றை எடுத்துப் படிப்பது போல் முகத்தை மறைத்துக் கொண்டார்.
எம்.எல்.ஏ அன்பழகன் தலையில் கை வைத்துக் கொண்டார். சீனியரான கல்யாணசுந்தரம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்துகின்ற வகையில் நடந்து கொள்வதாக அங்கிருந்தவர்கள் புலம்பினர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb