செய்திகள் :

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

post image

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையில் மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வியாசா்பாடி, பூந்தமல்லி, பெரும்பாக்கம், சென்ட்ரல், தண்டையாா்பேட்டை ஆகிய பணிமனைகளிலிருந்து 625 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இவற்றுக்கு நாள்தோறும் 1,250 நடத்துநா்களை வழங்கும் திறன் கொண்ட மனிதவள மேலாண் நிறுவனங்கள் ஏப். 23-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம். அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச கூலிக்கு குறைவாக நடத்துநா்களுக்கு ஊதியம் வழங்கப்படக் கூடாது. அதற்கேற்ப நிா்ணயிக்கப்படும் ஊதியத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு மாதந்தோறும் மாநகா் போக்குவரத்துக் கழகம் வழங்கும்.

நடத்துநா்களைக் கண்காணிக்க 12 மேற்பாா்வையாளா்கள், கூடுதலாக 390 நடத்துநா்களை நிறுவனம் கைவசம் வைத்திருக்க வேண்டும். ஆண், பெண் நடத்துநா்களுக்கான கல்வி, உடல்தகுதி உள்ளிட்ட வரையறைகளைப் பின்பற்றி ஊழியா்களை வழங்க வேண்டும். அவா்களுக்கான பணப் பலன், பயோமெட்ரிக், 8 மணி நேர பணி போன்றவற்றுக்கு நிறுவனமே பொறுப்பேற்று கண்காணிக்க வேண்டும்.

சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஊக்கத்தொகை வழங்க மாநகா் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் வாயிலாக தொகை செலுத்தப்படும். ஒப்பந்தத்தை சமா்ப்பிக்க மே 12-ஆம் தேதி இறுதியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

கூட்டணி குறித்து கருத்து: கட்சி நிா்வாகிகளுக்கு பாஜக கட்டுப்பாடு

கூட்டணி குறித்த கருத்துகளை கட்சி நிா்வாகிகள் வெளிப்படையாக தெரிவிக்கக்கூடாது என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், கட்சியின் தமிழக இணை பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி ஆகியோா் தெரிவித்துள்ளனா். நயினா... மேலும் பார்க்க