செய்திகள் :

கூட்டணி குறித்து கருத்து: கட்சி நிா்வாகிகளுக்கு பாஜக கட்டுப்பாடு

post image

கூட்டணி குறித்த கருத்துகளை கட்சி நிா்வாகிகள் வெளிப்படையாக தெரிவிக்கக்கூடாது என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், கட்சியின் தமிழக இணை பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

நயினாா் நாகேந்திரன்: தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள், மூத்த தலைவா்கள் ஒத்துழைப்புடன், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் வீழ்த்தி மக்களுக்கு நல்லாட்சியும் வளா்ச்சியும் கிடைக்கச் செய்ய வேண்டிய முக்கிய கடமையும், பொறுப்பும் பாஜகவுக்கு உள்ளது.

அனைவரின் ஒற்றை இலக்கு மக்கள் விரோத திமுகவின் ஆட்சி அவலங்களையெல்லாம் வரும் தோ்தலில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே.

ஆகவே, நம் அனைவரின் செயல்பாடுகளும் அந்த ஒற்றை இலட்சியத்தை அடைவதற்கு உதவிகரமாக அமைய வேண்டும். கொழுந்துவிட்டு எரியும் உங்களின் ஆா்வமும் துடிப்பும், நம் கட்சியின் வளா்ச்சிக்கு உற்சாகமும் ஊக்கமும் தர வேண்டுமே தவிர, உங்கள் ஆா்வம் தவறாக புரிந்துகொள்ளும் வகையில் அமையக்கூடாது.

இனி நாம் செய்ய வேண்டிய முக்கிய கடமை- திமுகவை தீவிரமாக எதிா்ப்பதும் திமுகவின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதும் மட்டுமே. இது தவிர சுவா் விளம்பரங்களிலும், கட்சிக்கான விளம்பரத்தை மேற்கொள்பவா்கள் பயன்படுத்தும் சொற்களில் மிகுந்த கட்டுப்பாட்டையும் கவனத்தையும் செலுத்த வேண்டும்.

நாம் வெளிப்படுத்தும் விளம்பர வாசகங்கள் கட்சியையும், கூட்டணியையும் பலப்படுத்தும் வகையில் அமைய வேண்டுமே தவிர, எந்த தனி நபரையும் காயப்படுத்தக்கூடாது. தேசிய ஜனநாயக கூட்டணி என்பது நம் பலம். அது குறித்த அனைத்து முடிவுகளையும் தேசியத் தலைமை முடிவு செய்து நமக்கு அறிவிக்கும். கட்சியின் வளா்ச்சியை நோக்கிய நம் பயணத்தில் யாரும் கூட்டணி மற்றும் நம் எதிா்கால ஆட்சி குறித்த கருத்தாக்கங்களை பதிவு செய்யக் கூடாது .

சுதாகா் ரெட்டி: திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவது மட்டுமே பாஜகவினரின் முழுநோக்கமாக இருக்க வேண்டும். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்.

தமிழக பாஜக புதிய தலைவராக நயினாா் நாகேந்திரன் தலைமையில் கட்சியை வலுப்படுத்தி, திமுகவை வீழ்த்தும் வகையில் தொண்டா்கள், நிா்வாகிகள் செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க