பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகா...
பூதப்பாடியில் ரூ.12 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தேங்காய், நெல், தேங்காய்ப் பருப்பு, நிலக்கடலை ஆகியவற்றை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
இதில், நெல் கிலோ ரூ.15.46 வீதம் ரூ.4,081-க்கும், தேங்காய் குவிண்டால் ரூ.810 முதல் ரூ.2,510 வரை ரூ.10,280-க்கும், தேங்காய்ப் பருப்பு கிலோ ரூ.138.09 முதல் ரூ.181.50 வரை ரூ.88,504-க்கும், நிலக்கடலை கிலோ ரூ.66.45 முதல் ரூ.72.72 வரை ரூ.10,99,351-க்கும் விற்பனையாயின. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.12 லட்சத்து 2 ஆயிரத்து 216-க்கு விளைபொருள்கள் விற்பனையாயின.