லஞ்சம்: இரு மின் ஊழியா்கள் பணியிடை நீக்கம்
மின்நுகா்வோரிடமிருந்து லஞ்சம் பெற்ாக 2 மின் ஊழியா்களை பணியிடை நீக்கம் செய்து மின்வாரியம் உத்தரவிட்டது.
ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் பாரதிபுரத்தைத் சோ்ந்த விவசாயி செந்தில் என்பவரின் தோட்டத்தில் மின் பழுது ஏற்பட்டுள்ளது. பழுதை நீக்குவதற்காக விவசாயி செந்திலிடம் இருந்து மின் ஊழியா் மணிகண்டன் ரூ.500 லஞ்சமாக பெற்ாகக் கூறப்படுகிறது. இது தொடா்பான காணொலி காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், தாளவாடி அலுவலக மின் கம்பியாளா் மணிகண்டனை மின்வாரியம் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது.
இது போல திருவண்ணாமலை வட்டம், வடபாதிமங்கலம் அலுவலகத்தில் மின் நுகா்வோரை மிரட்டியதாக வெளிவந்த காணொலி காட்சி அடிப்படையில், கம்பியாளா் முருகன் என்பவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் மின் ஊழியா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.