தென்காசி அருகே காரில் கஞ்சா கடத்தல்; பிரபல கஞ்சா ரவுடி கைது!
தென்காசி மாவட்டம் முழுவதும் கஞ்சாவிற்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் மீனாட்சிநாதன் மேற்பார்வையில் சிவகிரி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் வரதராஜன் மற்றும் போலீஸார் தென்காசி - மதுரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த கேரளா பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கார் ஓட்டுனரை பிடித்து விசாரிக்கையில், காரை ஓட்டி வந்தவர் சிவகிரியை சேர்ந்த கார்த்திக் என தெரியவந்தது. இவர்மீது 10 -க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்கு மற்றும் வழிப்பறி வழக்குகள் தென்காசி மாவட்டத்தில் நிலுவையில் உள்ளது. இதையடுத்து கார்த்திக்கை கைது செய்த போலீஸார், காரில் இருந்து சுமார் இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
