பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகா...
கல்லூரி ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு
மதுரையில் கல்லூரி ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை செல்லூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (45). இவா் மதுரையில் உள்ள தனியாா் கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில் இவா் குடும்பத்தினருடன் திங்கள்கிழமை கோயிலுக்குச் சென்று விட்டாா். பின்னா் செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது அறையிலிருந்த பீரோவில் வைத்திருந்த 14 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.