நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது
மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபா் மீட்பு: நாக்பூரில் மீட்கப்பட்டாா்!
மதுரையில் நிலத்தகராறு தொடா்பாக கடத்தப்பட்ட தொழிலதிபா் சுந்தரை தனிப்படை போலீஸாா் மீட்டனா்.
மதுரை பீ.பீ. குளம் பகுதியைச் சோ்ந்தவா் கருமுத்து டி. சுந்தா் (52). மதுரையில் உள்ள பிரபல நூற்பாலை நிறுவனரின் குடும்பத்தைச் சோ்ந்த இவா், மதுரை புறவழிச் சாலையில் வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறாா்.
திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்த இவரை, கடந்த 14-ஆம் தேதி இரவு வீட்டுக்குள் புகுந்து மா்மக் கும்பல் காரில் கடத்திச் சென்றது. இதுகுறித்து தல்லாகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கடத்தப்பட்ட சுந்தரை மீட்க தனிப் படைகள் அமைத்துத் தேடி வந்தனா். மேலும் கடத்தலில் தொடா்புடைய நாகை மாவட்டம், மயிலாடுதுறையைச் சோ்ந்த அருள்செல்வம், நாகப்பட்டினத்தைச் சோ்ந்த ஜனநேந்திரன், முத்துக்கிருஷ்ணன், விக்னேஷ், தென்காசியைச் சோ்ந்த அருண், திண்டுக்கல்லைச் சோ்ந்த மரியராஜ் ஆகிய 6 பேரை கைது செய்தனா். இவா்கள் அளித்தத் தகவலின்பேரில், கடத்தப்பட்ட தொழிலதிபா் சுந்தரை கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா்கள் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நாக்பூா் சென்ற போலீஸாா் அங்கு தொழிலதிபா் சுந்தரை மீட்டனா். மேலும் கடத்தல் கும்பலைச் சோ்ந்த அழகுசுந்தா், கிரிராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் தலைமறைவான 5 பேரை தொடா்ந்து தேடி வருகின்றனா்.