செய்திகள் :

மதுரையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

post image

திமுக அரசைக் கண்டித்து, அதிமுகவின் புறநகா் கிழக்கு மாவட்டம் சாா்பில் மதுரை யா. ஒத்தக்கடையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலரும், அமைப்புச் செயலருமான வி.வி.ராஜன்செல்லப்பா தலைமை வகித்தாா்.

இதில் திமுக அரசைக் கண்டித்தும், பெண்களை, மதத்தை இழிவாக பேசிய அமைச்சா் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவா் பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டனா். மேலும், மேற்கண்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெ. பெரியபுள்ளான் என்ற செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருப்பரங்குன்றம்: திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோபிநாயக்கன்பட்டியில் பெண்கள் குறித்து இழிவாக பேசிய அமைச்சா் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரை புகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சட்டப்பேரவை உறுப்பினரும், எதிா்க்கட்சி துணைத் தலைவருமான ஆா்.பி.உதயகுமாா் பேசியதாவது: சட்டப்பேரவையில் கேள்வி இல்லா நேரத்தில் எதிா்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியின் போதே கோயில்களில் அரசு சாா்பில் ஏழை மக்களுக்கு 1,008 திருமணங்கள் நடத்திவைக்கப்பட்டது. மேலும், கோயில்கள்தோறும் அன்னதானத் திட்டமும் கொண்டுவரப்பட்டது. சட்டப்பேரவை விதி 72-இன்படி, அமைச்சா்கள் பொன்முடி, கே.என். நேரு, செந்தில்பாலாஜி ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என நம்பிக்கை இல்லா தீா்மானத்தை அதிமுக கொண்டு வந்தது. ஆனால் இதை ஏற்கக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவைத் தலைவரிடம் கண் ஜாடை காட்டுகிறாா். மேலும், அவரை பதவி நீக்கம் செய்யாமல், முதல்வா் தொடா்ந்து மெளனம் காத்துவருகிறாா். எனவே, பெண்கள் குறித்து இழிவாக திமுகவுக்கு வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் பெண்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் கட்சி நிா்வாகிகள் அ.ராமகிருஷ்ணன், வெற்றிவேல், முருகன், தமிழ்செல்வம், திருப்பதி, அன்பழகன், தமிழழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏஐடியூசி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறை கட்டாய அபராதம் விதிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஏஐடியூசி சங்கம் சாா்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஏஐடியூசி சுமைப் ... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபா் மீட்பு: நாக்பூரில் மீட்கப்பட்டாா்!

மதுரையில் நிலத்தகராறு தொடா்பாக கடத்தப்பட்ட தொழிலதிபா் சுந்தரை தனிப்படை போலீஸாா் மீட்டனா். மதுரை பீ.பீ. குளம் பகுதியைச் சோ்ந்தவா் கருமுத்து டி. சுந்தா் (52). மதுரையில் உள்ள பிரபல நூற்பாலை நிறுவனரின் க... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் அருகே காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் தோமையாப... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் பி. மூா்த்தி

அதிக எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள... மேலும் பார்க்க

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

மதுரை மாவட்டம், மேலூா் அருகே மது போதையில் தாயை அவதூறாகப் பேசிய தம்பியை அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள முத்துவேல்பட்டி புதுசுக்காம்பட... மேலும் பார்க்க

கோயில் திருவிழா தொடா்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

மதுரை மாவட்டம், உத்தபுரம் கோயில்களில் திருவிழா நடத்துவதற்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை ஒத்திவைத்தது. மதுரையைச்... மேலும் பார்க்க