சஹால்தான் ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர்: பஞ்சாப் கேப்டன்
கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை
திண்டுக்கல் அருகே காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் தோமையாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 2017-ஆம் ஆண்டு டிச. 5-ஆம் தேதி திண்டுக்கல் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரில் 150 கிலோ கஞ்சா கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, கஞ்சாவையும், காரையும் பறிமுதல் செய்த போலீஸாா், கஞ்சா கடத்திய திருவள்ளூா் பொன்னேரி மீஞ்சூா் பகுதியைச் சோ்ந்த பா. சசிக்குமாரையும் (43) கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணையின் நிறைவில், குற்றஞ்சாட்டப்பட்ட சசிக்குமாருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ். ஹரிஹரகுமாா் தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் காவல் துறை தரப்பில் அரசு வழக்குரைஞா் விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.