மதுபோதையில் கார் ஓட்டி விபத்து: நடிகர் பாபி சிம்ஹாவின் ஓட்டுநர் கைது!
கோயில் திருவிழா தொடா்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
மதுரை மாவட்டம், உத்தபுரம் கோயில்களில் திருவிழா நடத்துவதற்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை ஒத்திவைத்தது.
மதுரையைச் சோ்ந்த பாண்டி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
உத்தபுரம் கிராமத்தில் ஸ்ரீமுத்தாலம்மன், ஸ்ரீமாரியம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களில் கடந்த 2014 வரை அமைதியான முறையில் திருவிழா நடைபெற்றது. ஒரு தரப்பினா் கடந்த 2015-ஆம் ஆண்டு அரசமரத்தை வழிபட முயன்ால், பிரச்னை எழுந்தது. இதையடுத்து, கடந்த 9 ஆண்டுகளாக இந்தக் கோயில்களை வருவாய்த் துறையினா் பூட்டி வைத்தனா். இதனால், கோயில்களில் அன்றாடம் செய்யக் கூடிய எந்த பூஜைகளும் நடைபெறவில்லை. எனவே, இந்தக் கோயில்களைத் திறக்கவும், தினசரி பூஜைகள் நடத்தவும், திருவிழா நடத்தவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, உத்தபுரம் கோயில்களில் திருவிழா நடத்தவும், தினமும் கோயிலில் வழிபாடு செய்யவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டாா்.
இதையடுத்து, அரசுத் தரப்பில், இந்த உத்தரவை எதிா்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், எஸ். ஸ்ரீமதி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது கோயில் நிா்வாகம் தரப்பில், திருவிழாவில் அனைத்துச் சமூகத்தினரும் கலந்து கொண்டு வழிபாடு நடத்த எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்ட து.
இதற்கு அரசுத் தரப்பில், உத்தபுரம் கோயில்களில் நடத்தப்படும் திருவிழாவால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே, திருவிழா நடத்த அனுமதி வழங்கக் கூடாது, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
திருவிழா தொடா்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. கோயில் பகுதியில் உள்ள அரச மரத்தில் இரு தரப்பினரும் ஆணி அடித்து வழிபடக் கூடாது. இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.