ஃபேஸ்புக் பயனர்களின் நண்பர்கள் பட்டியலை நீக்க திட்டமிட்ட மார்க்!
போதைப்பொருளை கடலில் போட்டு தப்பிய கடத்தல் கும்பல்; 300 கிலோ மீட்பு.. குஜராத்தில் நடந்தது என்ன?
குஜராத் கடல் பகுதியில் அடிக்கடி போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கமாக இருக்கிறது. குஜராத் கடல் பகுதி மட்டுமல்லாது குஜராத் துறைமுகத்திற்கும் வெளிநாட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தி வரப்படும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
அடிக்கடி பாகிஸ்தான் கடத்தல்காரர்கள் குஜராத்திற்குள் படகில் போதைப்பொருளை கடத்தி வருகின்றனர். இதனால் குஜராத் கடல் பகுதியில் எப்போதும் பாதுகாப்பு பலமாக இருக்கும்.
குஜராத் எல்லைக்குள் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக குஜராத் தீவிரவாத தடுப்பு படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே இது குறித்து கடலில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். குஜராத் தீவிரவாத தடுப்பு படையினரும் கடலுக்குள் விரைந்து சென்றனர்.

வேறு இடத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்புப்படை கப்பல் உடனடியாக சர்வதேச எல்லைக்கு திருப்பிவிடப்பட்டது.
நள்ளிரவில் கடுமையான இருட்டு நிலவியது. அந்த இருட்டையும் பொருட்படுத்தாமல் சந்தேகத்திற்கு இடமான வகையில் மர்ம படகு ஒன்று இந்திய கடல் எல்லைக்குள் வருவதை கவனித்தனர். உடனே அந்த படகை நோக்கி வேகமாக பாதுகாப்புப்படை கப்பலை செலுத்தினர்.
இந்திய கப்பல் வருவதை பார்த்த கடத்தல் கும்பல், படகில் இருந்த போதைப்பொருள்களை கடலில் தூக்கிப்போட்டுவிட்டு அவசர அவசரமாக சர்வதேச கடல் எல்லைக்குள் சென்றுவிட்டனர்.
இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் வருவதற்குள் அவர்கள் சர்வதேச கடல் எல்லைக்குள் சென்றுவிட்டதால் அவர்களை பிடிக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் கடலில் தூக்கிப்போட்ட போதைப்பொருள் கடலில் மிதந்துகொண்டிருந்தது. இரவு முழுக்க தேடுதல் நடத்தி 300 கிலோ எடையுள்ள மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தல்காரர்கள் எவ்வளவு போதைப்பொருளை கடலில் போட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதில் 300 கிலோ மட்டுமே சிக்கியது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1800 கோடியாகும். அப்போதைப்பொருளை போர்பந்தர் கடற்கரைக்கு கொண்டு வந்து குஜராத் தீவிரவாத தடுப்புபடையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து குஜராத் சர்வதேச எல்லையில் ரோந்துப்பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
