செய்திகள் :

ஃபேஸ்புக் பயனர்களின் நண்பர்கள் பட்டியலை நீக்க திட்டமிட்ட மார்க்!

post image

ஃபேஸ்புக் பயனர்களின் நண்பர்கள் பட்டியலை முழுவதும் நீக்க அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் திட்டமிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அரசு மெட்டா நிறுவனம் மீது நம்பிகையற்ற வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பான முதற்கட்ட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கின் விசித்திரமான யோசனை பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் தளத்தில் பயனர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க அவர்களின் நண்பர்கள் பட்டியல் முழுவதையும் நீக்கி மீண்டும் முதலிலிருந்து புதிதாக நண்பர்களுடன் இணைவதை ஊக்குவிக்கலாம் என மார்க் ஸக்கர்பெர்க் மெட்டா ஊழியர் ஒருவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு செய்தி அனுப்பியுள்ளார்.

இதன்மூலம், ஃபேஸ்புக் தளத்தில் பயனர்களை அதிகநேரம் செலவிட வைக்கலாம் என அவர் திட்டமிட்டுள்ளார்.

ஆனால், ஃபேஸ்புக் தலைவர் டாம் அலிசன் உள்பட மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் பலரும் அப்போது இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, ஃபேஸ்புக் தளத்தை நண்பர்கள் சார்ந்த மாடலாக இல்லாமல், பின்தொடர்பவர்கள் (ஃபாலோயர்ஸ்) சார்ந்த மாடலாக மாற்றவும் அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், அதுவும் செயல்படுத்தப்படவில்லை.

கடந்த சில வாரங்களில் ஃபேஸ்புக் நிறுவனம் தனது பழைய ஃபேஸ்புக் அமைப்பை மீட்டெடுக்கும் விதமாக புதிய டேப் (Tab) மூலம் நண்பர்களை இணைத்து அவர்களின் ரீல்ஸ்கள், கண்டென்டுகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகின்றது.

இதன்மூலம் தனது பழைய திட்டங்களைக் கைவிட்டு ஃபேஸ்புக்கை பழைய முறையிலேயே இயங்கவைக்க மார்க் ஸக்கர்பெர்க் முயற்சித்து வருகிறார்.

"ஃபேஸ்புக் தற்போது இருப்பதைவிட கலாச்சார ரீதியாக செல்வாக்கு மிக்கதாக மாற்றுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. பேஸ்புக் முன்பு எவ்வாறு பயன்படுத்தப்பட்டதோ அதே நிலைக்கு மீண்டும் திரும்பும்" என்று மார்க் ஸக்கர்பெர்க் தனது அடுத்தகட்ட இலக்குகள் பற்றி 2024 இறுதியில் நடைபெற்ற கூட்டத்தில் முதலீட்டாளர்களிடம் பேசியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | ஐ-போன்களுக்கு இந்தியாவில் வரவேற்பு கிடைப்பது ஏன்?

வாட்ஸ்ஆப்பில் புதிய அம்சம் அறிமுகம்!

வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டிக்கர் பயன்படுத்துவதை எளிதாக்கும் வகையில் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.பயனர்கள் நண்பர்களுடன் உரையாடும்போது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காக ஸ்டிக்கர் ஆப்ச... மேலும் பார்க்க

சுஸுகி இரு சக்கர வாகன விற்பனை 11% அதிகரிப்பு

முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியா, கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் 11 சதவீத விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டு... மேலும் பார்க்க

2,850 கோடி டாலராகக் குறைந்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி

சா்வதேச அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 2,850 கோடி டாலராகக் குறைந்துள்ளது.இது குறித்து நவரத்தின, ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன... மேலும் பார்க்க

நிஸ்ஸான் இயக்குநர்கள் குழுவிலிருந்து விலகும் ரெனால்ட் தலைவர்!

டோக்கியோ: நிஸ்ஸான் நிறுவனத்தின் சரிவைச் சமாளிக்கும் வகையில், அதன் இயக்குநர்கள் குழுவிலிருந்து ரெனால்ட் தலைவர் ஜீன்-டொமினிக் செனார்ட் விலக உள்ளதாக ஜப்பானிய வாகன உற்பத்தியாளர் தெரிவித்துள்ளார். நிஸ்ஸானி... மேலும் பார்க்க

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிகர லாபம் 1.8% உயர்வு!

புதுதில்லி: ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட், மார்ச் காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம், 1.8 சதவிகிதம் உயர்ந்து ரூ.316.11 கோடியாக உள்ளது.முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்க... மேலும் பார்க்க

சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் வெளியானது! விலை எவ்வளவு?

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி எம்56 5ஜி இன்று வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனம் ரூ. 30,000-க்குள் விற்கப்படும் ஸ்மார்ட்போன் மாடல்களில் நீடித்து உழைப்பதிலும், ஸ்லிம்மான வடிவமைப்பிலும... மேலும் பார்க்க