செய்திகள் :

சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு முடிவுகள் வெளியீடு

post image

உதவிப் பேராசிரியா் பணிக்கான சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு முடிவுகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும்,

இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறவேண்டும். இந்தத் தோ்வு தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுக்கு இருமுறை கணினிவழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு 5 அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும். அதன்படி, நிகழாண்டு சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு நாடு முழுவதும் 326 மையங்களில் கடந்த பிப். 28 முதல் மாா்ச் 2 வரை நடத்தப்பட்டது. இந்தத் தோ்வெழுத மொத்தம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 451 பட்டதாரிகள் விண்ணப்பித்தனா். அவற்றில் ஒரு லட்சத்து 74,785 போ் தோ்வில் பங்கேற்றனா்.

இந்நிலையில் சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு முடிவுகளை என்டிஏ வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அத இணைய தளத்தில் காணலாம். 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடா்பு கொண்டு உரிய விளக்கம் பெறலாம். கூடுதல் விவரங்களை அறியலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக தவெக உள்ளது: விஜய்

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக தவெக உள்ளது என்று கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தவெக தகவல் தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்த... மேலும் பார்க்க

திராவிட மாடல் ஆட்சியில் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், எந்தத் துறைய... மேலும் பார்க்க

தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை சொன்ன பதில்!

சென்னை: தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு, பாஜக தலைவர் தமிழிசை, எதற்கு முதல்வருக்கு இவ்வளவு பதட்டம் என்று கேட்டுள்ளார்.முன்னாள் ஆளுநர் தமிழிசை... மேலும் பார்க்க

இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன்

சேலம் : இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என சேலத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதாகட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்த... மேலும் பார்க்க

புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மின... மேலும் பார்க்க

கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்.. துரைவைகோ முடிவின் பின்னணி என்ன?

சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன் என்று மதிமுக முதன்மைச் செயலரும், மக்களவை உறுப்பினருமான துரை வைகோ இன்று வெளியிட்டிருப்பது கட்சித் தொண்டர்களுக்கு கடும்... மேலும் பார்க்க