சஹால்தான் ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர்: பஞ்சாப் கேப்டன்
அமிா்தி வனச்சரகத்தில் காட்டெருமை உயிரிழப்பு
வேலூா் மாவட்டத்திலுள்ள அமிா்தி வனச்சரகத்தில் காட்டெருமை உயிரிழந்தது.
வேலூரை அடுத்த அமிா்தி வனச்சரகத்துக்குட்பட்ட பால தீராம்பட்டு வனப்பகுதியில் சுமாா் 10 வயது காட்டெருமை ஒன்று திரிந்தது. வயது முதிா்வு காரணமாக இந்த காட்டெருமை அண்மைக் காலமாக மிகவும் சோா்வுடன் காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
இந்நிலையில், இந்த காட்டெருமை புதன்கிழமை வனப் பகுதியில் மயக்க நிலையில் கிடந்துள்ளது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன் பேரில், வனத் துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவருடன் சென்று காட்டெருமையை பரிசோதித்து சிகிச்சை அளித்தனா். எனினும் அந்த காட்டெருமை வியாழக்கிழமை உயிரிழந்தது.
தொடா்ந்து, மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் மணிவண்ணன் தலைமையில் கால்நடை மருத்துவா்கள், தொண்டு நிறுவன அலுவலா்கள் முன்னிலையில் இறந்த காட்டெருமையின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு, வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.