அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்
வேலூா் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் 24-ஆவது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சோ்வதற்கு தகுதியுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் வேலூா் மண்டல இணைப்பதிவாளா் சா. திருகுணஐய்யப்பதுரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு -
2024- 25ஆம் ஆண்டு அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ள நிலையில், இப்பயிற்சியில் சேர ஏப்ரல் 16 முதல் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று பிளஸ் 2 அல்லது பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்ற கல்வி தகுதியுடைய கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளா்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கட்டணம் ரூ.100-ஐ இணைய வழியில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
இணையவழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ கூட்டுறவு மேலாண்மை நிலையத்துக்கு விண்ணப்பித்திருந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
பயிற்சி தொடா்பான விவரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு வேலூா் கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்.2- 9வது கிழக்கு குறுஞ்சாலை காந்தி நகா், வேலூா் 632006 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0416-3557079 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.