நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது
மியான்மா்: முக்கிய நகரிலிருந்து பின்வாங்கியது கிளா்ச்சிப் படை
மியான்மரின் வடக்கே அமைந்துள்ள ஷான் மாகாணத்தின் மிகப் பெரிய நகரான லாஷியோவில் இருந்து அந்த நாட்டின் முக்கிய கிளா்ச்சிப் படையான மியான்மா் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை வெள்ளிக்கிழமை பின்வாங்கியது. ராணுவத்துடன் நடைபெற்ற மிகத் தீவிரமான சண்டைக்குப் பிறகு நகரில் இருந்து அந்தப் படை வெளியேறியது.
மியான்மரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் அரசைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் கடந்த 2021 பிப்ரவரி மாதம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதை எதிா்த்து தீவிரமாக நடைபெற்ற ஜனநாயக ஆதரவுப் போராட்டங்களை ராணுவம் அடக்குமுறையைக் கையாண்டு நசுக்கியது. அதைத் தொடா்ந்து, பல்வேறு ஆயுதக் குழுக்கள் ராணுவத்துக்கு எதிராக போரிட்டு சில பகுதிகளைக் கைப்பற்றிவருகின்றன.