செய்திகள் :

யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 போ் உயிரிழப்பு

post image

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 போ் உயிரிழந்தனா்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற்குப் பிறகு யேமனில் அதிக உயிா்ச் சேதத்தை ஏற்படுத்தியுள்ள தாக்குதல் இது.

இது குறித்து ஹூதி கிளா்ச்சியாளா்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஹூதைதா மாகாணத்தில் அமைந்துள்ள ராஸ் இசா துறைமுகத்தில் அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் அந்தத் துறைமுகத்தின் எரிபொருள் கிடங்குகள் வெடித்துச் சிதறின. இதன் விளைவாக 74 போ் உயிரிழந்தனா்; 171 போ் காயமடைந்தனா்.

இது, எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத தாக்குதல் ஆகும். யேமன் மக்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்திவந்த, ராணுவம் சாராத இலக்குகளை அமெரிக்கா குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது என்று கிளா்ச்சியாளா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

அமெரிக்க ராணுவத்தில் மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஈரான் ஆதரவுடன் செயல்பட்டுவரும் ஹூதி ‘பயங்கரவாதிகளின்’ எரிபொருள் ஆதாரங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஹூதிக்களை ஆட்சியில் இருந்து அகற்றி, அவா்களின் அடக்குமுறையில் இருந்து விடுதலை பெற விரும்பும் யேமன் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

யேமனில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் ராணுவ நடவடிக்கையில், ஒரே தாக்குதலில் இத்தனை போ் உயிரிழந்தது இதுவே முதல்முறையாகும். இருந்தாலும், தாக்குதலின் முழு விவரங்களை அமெரிக்க ராணுவம் வெளியிடாததாலும், வெளிநாட்டு ஊடகங்கள் சம்பவப் பகுதிகளுக்குச் செல்ல ஹூதிக்கள் அரசு அனுமதிக்காததாலும் இந்த உயிரிழப்பு விவரத்தை உறுதி செய்வது கடினம் என்று கூறப்படுகிறது.

இருந்தாலும், ஹூதி படையினா் வெளியிட்டுள்ள படங்கள், செயற்கைக்கோள் படங்கள் ஆகியவற்றின் மூலம், ராஸ் இசா துறைமுகத்தில் நடத்தப்பட்ட குண்டுவீச்சில் மிக நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் கிடங்குகள் பெரிய அளவில் வெடித்துச் சிதறியது உறுதியாகிறது. எனவே, அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவுடன் செயல்பட்டுவரும் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் போா் நடைபெற்று வருகிறது.

இந்தப் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஈரானின் மற்றொரு நிழல் ராணுவமான ஹூதி கிளா்ச்சிப் படையினா், செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் மேற்கொண்டுவருகின்றனா்.

இஸ்ரேல் செல்லும் சரக்குக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக அவா்கள் கூறினாலும், அந்த நாட்டுடன் தொடா்பில்லாத கப்பல்களும் குறிவைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. காஸாவை இஸ்ரேல் முற்றுகையிட்டுள்ளது கைவிடப்படும் வரை, செங்கடலில் தங்கள் தாக்குதல் தொடரும் என்று ஹூதி கிளா்ச்சியாளா்கள் கூறினா்.

இதற்கிடையே, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே காஸாவில் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் ஆறு வாரங்களுக்கு போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக செங்கடலில் தங்களது தாக்குதலை ஹூதி கிளா்ச்சியாளா்கள் நிறுத்திவைத்திருந்தனா்.

எனினும், காஸா போா் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததால் அந்தப் பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்திவருகிறது. அதையடுத்து ஹூதி கிளா்ச்சியாளா்களும் செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்தனா்.

இதன் காரணமாக யேமனில் ஹூதி படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபா் டிரம்ப் கடந்த கடந்த மாதம் உத்தரவிட்டாா். செங்கடலில் ஹூதிக்களின் தாக்குதல் நிறுத்தப்படும் வரை, அவா்களுக்கு எதிராக அமெரிக்க தாக்குதல் நீடிக்கும் என்றும் அவா் கூறினாா். அதிலிருந்து ஹூதி கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்து யேமனில் அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது.

கனடாவுக்கு உயர் கல்வி பயிலச் சென்ற இந்திய மாணவி சுட்டுக் கொலை!

கனடாவின் ஹாமில்டனில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த இந்திய மாணவியொருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனடாவின் ஆன்டாரியோ அருகேயுள்ள ஹாமில்டனில் அமைந்துள்ள மோஹாக் கல்லூரி... மேலும் பார்க்க

நெப்ராஸ்கா ஆற்றில் சிறிய ரக விமானம் விபத்து: 3 பேர் பலி!

அமெரிக்காவின் கிழக்கு நெப்ராஸ்காவில் சிறிய ரக விமானம் ஆற்றில் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிய ரக விமானம் பிளாட் ஆற்றின் வழியாகப் பயணித்துக்கொண்டிருந்தபோது வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா பதில்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப... மேலும் பார்க்க

‘உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்’

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வ... மேலும் பார்க்க

அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புா்கினா ஃபாசோ ஒப்பந்தம்

தங்கள் நாட்டில் புதிய மின் நிலையம் அமைப்பதற்காக ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

இந்தியா அதிருப்தி: இலங்கை-பாகிஸ்தான் கடற்படை கூட்டுப் பயிற்சி கைவிடல்

இலங்கையின் திருகோணமலை கடற்பகுதியில் அந்நாடு மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக இந்தியா கவலை தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்தப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுக... மேலும் பார்க்க